கூத்துவில் கூத்தாடும் அருந்ததி

அம்முவாகிய நான் படத்துக்குப் பிறகு பத்மா மகன் இயக்கும் புதிய படத்துக்கு கூத்து என்று பெயரிட்டுள்ளனர். அடர்ந்த காட்டுப் பகுதி பயணத்தில் நடக்கும் சம்பவங்களை வைத்து உருவாகும் த்ரில்லர் இது. '26699 சினிமா' எனும் நிறுவனம் சார்பில் எஸ். மாலதி தயாரிக்கும் இந்தப் படத்தில் விமல், பிரசன்னா, ரிச்சர்ட், ஹரீஷ், பரணி, நிதிஷ், ஜெமினி பாலாஜி ஆகியோர் கதையின் நாயகர்களாக நடிக்கிறார்கள். அருந்ததி, நந்தகி ஹீரோயின்கள். தினேஷ் ஸ்ரீ ஒளிப்பதிவு செய்துள்ளார். இசை - ரெஹான் இசை. பாடல்கள், யுகபாரதி.