ஜிம்மில் அழகை தொலைக்கும் ஹன்சிகா.

ஹன்சிகாவுக்கு எப்படி அந்த மோசமான ஐடியா தோன்றியது என்று தெரியவில்லை. அவரது சமூக வலைதளத்தில் அந்த அதிர்ச்சி தகவலை படித்ததிலிருந்து மனசுக்குள் மத்தளச் சத்தம். கொப்பும் குலையுமாக இருப்பதால்தான் அடுத்த குஷ்பு என்று கோவில் கட்ட கர சேவைக்கு ஹன்சிகா பக்தர்கள் தயாராகி வருகிறார்கள். அவரை கடவுளாக்கி பார்க்க ஆசைப்பட அந்த கொப்பையும், குலையையும் குறைக்கப் போகிறாராம். எஸ், தினம் இரண்டு மணிநேரம் ஜிம்மில் தனது அழகை கரைக்கிறாராம் ஹன்சிகா.