
சர்ச்சைக்குரிய பிரபல எழுத்தாளர், சல்மான் ருஷ்டியால் எழுதப்பட்டு, 1980களில், வெளிவந்த, "மிட்நைட்ஸ் சில்ரன் என்ற, நாவலை மையமாக வைத்து, தயாராகியுள்ள, ஹாலிவுட் படம் இது. இந்தியா-பாகிஸ்தான் பிரிவினையின்போது, நடந்த சம்பவங்கள் தான், படத்தின் கதைக் களம். சர்வதேச அளவில், பல விருதுகளைப் பெற்ற, தீபா மேத்தா, இந்த படத்தை இயக்கியுள்ளார். ஹாலிவுட் படம் என்றாலும், சத்யபாமா, ரஜத் கபூர், ஷ்ரேயா, ஷபானா ஆஸ்மி, அனுபம் கெர் என, முழுக்க முழுக்க, இந்திய நட்சத்திர பட்டாளம்
தான், படத்தில் நிறைந்துள்ளது. ஏற்கனவே, சில சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு, பலத்த வரவேற்பை பெற்றுள்ள இந்த படம், விரைவில், இந்தியாவில் திரையிடப்படவுள்ளது.