DISTRICT 9 சினிமா விமர்சனம்


வேற்றுக் கிரக வாசிகள் பூமிக்கு வந்து பூமியில் வதியும் கோமாளிகள் மனிதருடன் அடிபிடிப் படுவதாக ஆயிரத்தெட்டு திரைப்படங்களை ஹொலிவூட் காரங்கள் எடுத்திருப்பார்கள். அந்த வரிசையில் ஆயிரத்தொன்பதாவது திரைப்படம் இது. பூமியில் ஒரு கூட்ட வேற்றுக் கிரகவாசிகள் அடைக்கலம்
புகுகின்றார்கள். அவர்கள் பல்கிப் பெருகி மனிதர்களுக்குப் பெரும் இடையூறாக விரைவில் மாறிவிடுகின்றார்கள். இந்த வேற்றுக் கிரக வாசிகளை கட்டுப்படுத்த மனிதர்கள் எடுக்கும் முயற்சி பற்றியே இந்தக் கதை விரிகின்றது. வழமையான பூச்சுத்தல்களுக்கும் குறைவில்லை. தென் ஆபிரிக்காவின் யோகன்னஸ்பேர்க நகரத்தின் மீது ஒருநாள் ஒரு விண்வெளிக் கலம் தரித்து நிற்கின்றது. அந்த கலம் நகராமல் அப்படியே நிற்பதுடன் அதன் கட்டளைப் பகுதி கீழே விழுந்து விட்டதாகவும் தகவல்கள் கசிகின்றன (என்ன விஜய் படமாக இருக்கும் எண்டு பயப்பிடுறியளோ?). முதலில் சிறிது குழப்பம் அடையும் மனித குலம் விழுந்தடித்து தனது ஒரு அணியினை ஆராய்வதற்காக சம்பவ இடத்திற்கு அனுப்புகின்றனர்.

பெரிதாக டிஷூம் டிஷூம் ஒன்று எதிர்பார்ப்பவர்கள் இந்த இடத்தில் ஏமாந்து போவர் ஏன் எனில் உள்ளே செல்லும் அணியினர் உணவில்லாம் வாடியிருக்கும் வேற்றுக் கிரகவாசிகள் கும்பலைக் காண்கின்றனர்.

இந்த வேற்றுக் கிரகவாசிகளை தத்தெடுக்கும் அரசு அவர்களை ஒரு முகாமில் தங்கவைக்கின்றது. இந்த முகாமின் பெயர்தான் District 9. விரைவிலேயே இந்த முகாம் ஒரு குப்பம் ஆகிவிடுகின்றது. பீற்றர் ஜக்சன் Slum dog Millionaire திரைப்படம் பார்த்தாரோ தெரியாது இப்படியாக வேற்றுக் கிரகவாசிகள் வாழும் இடம் குப்பம் ஆகிவிட்டதாக கூறுகின்றார்.

வேற்றுக் கிரகவாசிகளின் அட்டகாசம் நாளுக்கு நாள் ஜோகன்னஸ்பேர்க் நகரத்தில் கூட கூட அதனால் நகர வாசிகள் மிக வெறுப்படைகின்றனர். நகர மக்களின் எதிர்ப்பு கூடவே வேற்றுக் கிரகவாசிகளை நகரில் இருந்து 240 கி.மீ தூரத்தில் உள்ள வேறு ஒரு முகாமிற்கு இடம் மாற்றும் முயற்சிகள் தொடங்குகின்றது. இந்த இடம் மாற்றும் முயற்சியை Multinational United (MNU) எனும் தரியார் இராணுவப் பாதுகாப்பு நிறுவனம் பொறுப்பேற்கின்றது.

இங்கேதான் எங்கள் ஹீரோவான Wikus van de Merwe அறிமுகம் ஆகின்றார். காற்றில் பறந்துவந்தோ அல்லது சப்பாத்தைக் காட்டி டெனிமை காட்டி அப்புறம் முகத்தைக் காட்டியோ ஹீரோ அறிமுகம் நடக்கவில்லை.

இதற்குப் பிறகு என்னாச்சு என்பதை வெள்ளித்திரையிலே டிவிடியிலோ, டொரண்ட் புண்ணியத்திலயோ பார்த்து கொள்ளுங்கள்

திரைப்படத்தில் கணிசமான பகுதி ஒரு கையடக்க கமிராவில் எடுப்பது போலவும் பதிவாகின்றது. இந்த கையடக்க கமிராவில் எடுப்பதாக காட்டும் காட்சிகள் குளோவர்பீல்ட் எனும் திரைப்படத்தை ஞாபகம் ஊட்டுகின்றது.

திரைப்படம் தொடங்கியதில் இருந்து மெல்ல மெல்ல கதை சூடுபிடிக்கத் தொடங்குகின்றது. தறிகெட்டுத் திரியும் வேற்றுக் கிரகவாசிகள் மத்தியில் புத்திக்கூர்மையுடன் சில வேற்றுக்கிரக வாசிகள் இருப்பதாயும் காட்டியுள்ளார்கள். அதைவிட மனிதனில் கெட்ட குணம் பிறகு நல்ல குணம் என்று அந்தப் பக்கத்தாலும் கதை சிறிது நகர்ந்து கொள்கின்றது.

கடுமையான வன்முறைக் காட்சிகள் நிறைந்திருப்பதால் சிறுவர்களுக்கு ஏற்றபடம் என்று நினைக்கவில்லை.

பழைய பதிவுகளை தேட

[blogger]

MKRdezign

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget