ஒரு நடிகைக்கு எப்போது திருப்தி ஏற்படும் - லட்சுமி ராய்


நடித்தால் ஹீரோயினாகத் தான் நடிப்பேன் என,அடம் பிடிக்கும் நடிகைகளுக்கு மத்தியில், லட்சுமி ராய், சற்று வித்தியாசமானவராக உள்ளார். சமீபத்தில், அவர் அளித்துள்ள ஒரு பேட்டியில், "ஹீரோயின் ரோல் தான் வேண்டும் என, அதற்காக, காத்திருந்து காலத்தை கழிப்பதில், எனக்கு இஷ்டம் இல்லை. எந்தவிதமான ரோலிலும் நடிக்கத் தயாராக இருக்கிறேன்.ஒரு நடிகை, எந்த வேடத்திலும் நடிக்க தயாராக இருக்க வேண்டும். படம், வெற்றி பெறுகிறதா; இல்லையா என்பது முக்கியமல்ல.
குறிப்பிட்ட காலம் மட்டுமே, ஹீரோயினாக நடிக்க முடியும். இன்னும் சில ஆண்டுகள் கழித்து, நாம் எந்தெந்த படங்களில் நடித்திருக்கிறோம் என்பதை திரும்பிபார்த்தால், அதில், நம் மனதுக்கு பிடித்த கேரக்டர்கள் இருக்க வேண்டும். அப்போது தான், ஒரு நடிகைக்கு திருப்தி ஏற்படும் என, தத்துவார்த்தமாக பேசுகிறார், லட்சுமி ராய்.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஒருவர் மனதில் காதல் இருப்பதை கண்டுபிடிப்பது எப்படி?

மொபைல் போன்களின் அனைத்து ரகசிய குறியிடு எண்கள்

பிளாகரில் வலைப்பதிவு புள்ளிவிவரம் விட்ஜெட்