அவரது நிறத்துக்கும் ஸ்டைலுக்கும் வேட்டி, சட்டை யில் உலவினால் வெள்ளைக்காரன் தமிழுக்கு மாறியது போலிருக்கும். அதனால் அஜீத்துக்கு கதை யோசிக்கும் போதே இயக்குனர்கள் கற்பனையில் கோட்டுக்கு ஆர்டர் கொடுத்து விடுவார்கள். சலிக்க சலிக்க கோட்டையில் நடமாடியதால் வில்லேஜ் சப்ஜெக்டை ட்ரை பண்ணலாம் என்று நினைக்கிறார் அஜீத்.
அவரின் வேண்டுகோளுக்கிணங்க கிராமத்து கதையை உருவாக்கியிருக்கிறார் இயக்குனர் சிவா. சிறுத்தை சிவா என்றால் சட்டென்று அடையாளம் தெரியும்.
இன்னும் பெயரிடப்படாத இந்தப் படத்துக்கு வசனம் எழுதும் பொறுப்பை ஜெயமோகனிடம் தந்திருந்தாராம் சிவா. பாதி வசனம் முடிந்த நிலையில் பேப்பரை வாங்கி பார்த்தவர், ஜெயமோகனின் வசனம் தனது கதைக்கு செட்டாகாது என்று அவரை பாதியிலேயே கழற்றிவிட்டிருக்கிறார். இப்போது சிவாவே படத்தின் வசனத்தை எழுதி வருகிறாராம்.
சிவாவின் ரசனைக்கு ஜெயமோகன் அதிகம். வெறும் மோகன் யாராவது கிடைத்தால் ட்ரை பண்ணலாம்.