சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கையை சித்தரிக்கும் நடிகையின் டயரி

தமிழ் சினிமாவின் கனவு கன்னியாக திகழ்ந்து குறுகிய காலத்திலேயே தற்கொலை செய்து கொண்டு இறந்துபோன சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கையை "டர்ட்டி பிக்சர்ஸ்" என்ற பெயரில் இந்தியில் படமாக தயாரித்தார்கள். இதில் சில்க் ஸ்மிதாவாக வித்யாபாலன் நடித்தார். இதற்காக தேசிய விருதும் பெற்றார். தற்போது சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கையை "கிளைமாக்ஸ்" என்ற பெயரில் மலையாளத்தில் தயாரித்து வருகிறார்கள். உண்மையிலேயே சில்க்கை சினிமாவில்
அறிமுகப்படுத்திய இயக்குனர் ஈஸ்ட்மென் ஆண்டனி கதை எழுதி உள்ளார். பிரபல இயக்குனர் அனில் இயக்குகிறார். சில்க்காக நடித்துக் கொண்டிருப்பவர் சனாகான். தமிழில் "சிலம்பாட்டம்" படத்தில் நடித்தவர்.



தற்போது இந்தப் படத்தை "நடிகையின் டயரி" என்ற பெயரில் தமிழிலும் வெளியிடுகிறார்கள். படத்தை டப் செய்யாமல் காட்சிகளை தமிழுக்கு தனியாக எடுத்து தனி தமிழ் படமாக திரைக்கு கொண்டு வருகிறார்கள். இரண்டு மொழிகளிலும் ஒரே நேரத்தில் வெளிவரும் என்று தெரிகிறது. ஏற்கெனவே சில்க் ஸ்மிதாவின் கதையை தமிழில் எடுக்க சிலர் முயற்சி செய்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஒருவர் மனதில் காதல் இருப்பதை கண்டுபிடிப்பது எப்படி?

பிளாகரில் வலைப்பதிவு புள்ளிவிவரம் விட்ஜெட்

மொபைல் போன்களின் அனைத்து ரகசிய குறியிடு எண்கள்