பேய்ப் படம் பார்த்து நிறைய நாள் ஆகிவிட்டது என்ற காரணத்தால் ஒரு திரைப்படத்தைப் பார்ப்போம் என்று நினைத்து கடையில் வாங்கியதே இந்த Drag me to Hell எனும் திரைப்படம். சும்மா காமடிக்காகப் பேய்ப் படம் பார்க்கப்போயி தலைவிறைத்த கதையாகிவிட்டது. பெயரைப் பார்த்தவுடனேயை கதை என்னமாதிரி என்று ஓரளவிற்கு ஊகித்துவிடலாம் தானே?? அதாவது கெட்ட சக்தி உயிர்களை உடலோடு நரகத்திற்கு இழுத்து செல்வதே கதையில் அடிப்படை.
கதை சில ஆண்டுகளுக்கு (1969) முன்னர் நடக்கும் ஒரு நிகழ்வைக் காட்டுவதுடன் திரைப்படம் ஆரம்பிக்கின்றது. அதாவது நாடோடிகள் இனத்தின் மாலை ஒன்றை ஒரு சிறுவன் திருடிவிடுகின்றான். அதை மீள நாடோடிகள் அவனிடம் இருந்து பெற்றுக்கொள்ள மறுக்கின்றனராம். 3 நாட்களாக கடும் தொல்லைகளுக்கு ஆளாகின்றான் அந்தச் சிறுவன். கடைசியாக ஒரு பேய் ஓட்டும் பெண்ணிடம் அவனை அழைத்து வருகின்றார்கள் அவனுடைய பெற்றோர்.
பேயோட்டும் பெண்மணி எவ்வளவு முயன்றும் முடியாமல் அந்தச் சிறுவனை ஏதோ ஒரு ஜந்து பூமியைப் பிளந்து உள்ளே இழுத்துச் சென்றுவிடுகின்றது. அப்படியே கதை திரும்பி சில ஆண்டுகளுக்குப் பின்னர் (2009) நடக்கின்றது. இப்போது கதை ஒரு வங்கியில் பணிபுரியும் பெண்ணைச் சுற்றி நடக்கின்றது. ஒரு கடன் விடயமாக உதவி கோரும் ஒரு நாடோடி இன வயோதிப பெண்மணிக்கு உதவி செய்ய மறுக்கும் இந்த வங்கியின் பணி புரியும் நாயகியை விதி விளையாடத் தொடங்குகின்றது.
வழமையாகப் பலதடவை பார்த்த திரைப்படக் கதை என்றாலும் திரையிசையாலும் காட்சியமைப்புகளாலும் திகிலூட்டுகின்றார்கள். இரவு நேரத்தில் கிடக்கப்படாமல் இந்த திரைப்படத்தைப் பார்த்து ரொம்பவுமே நொந்து போய்விட்டேன். தூக்கம் வராமல் புரண்டு புரண்டு படுத்து நித்திரை கொள்ள முயற்சி பண்ணியது வேற விடையம்.
இந்த திரைப்படத்திற்கான கதையை சுமார் பத்து ஆண்டுகளிற்கு முன்னர் எழுதி முடித்துள்ளனர். த கேர்ஸ் எனும் பெயருடன் தயார்ப்பிற்குச சென்ற இந்த திரைப்படம் பல ஆண்டுகள் கழிந்து 2009ல் உலகத் திரையரங்குகளில் வெளியானது.
காலம் தாழ்த்தி வெளிவந்தாலும் உலகம் முழுவதும் திரைப்படம் சுமார் $86,498,545வசூலை அள்ளியுள்ளது. ரொம்பவுமே ஜாலியாக இருந்து பயங்கரமான நிலைக்கு மாறவேண்டுமென்றால் இந்த திரைப்படத்தைப் பாருங்கள்.