ஹாலிவுட் பாக்ஸ் ஆபிஸ் நிலவரம்


1. Jack the Giant Slayer 
எக்ஸ்மென், தி யூஸ்வல் சஸ்பெக்ட் படங்களை இயக்கிய பிரைன் சிங்க‌ரின் மெகா பட்ஜெட் படம். ஏறக்குறைய 200 மி. டாலர்கள் என்கிறார்கள். நமது விஸ்வரூபத்தைப்போல் பத்து மடங்கு பட்ஜெட். கதையே இல்லாமல் கிராஃபிக்ஸையும், பிரமாண்டத்தையும் நம்பி படமெடுத்த படத்தை பார்த்திடுவோமா என்று அமெ‌ரிக்க ஜனங்களே அறைகூவல் விடுத்திருப்பதால் படம்
100 மில்லியனை அங்கு வசூலித்தாலே பெ‌ரிய விஷயம். வெளியான மூன்று தினங்களில் 27.2 மில்லியன் டாலர்களை வசூலித்து முதலிடம் பிடித்திருக்கிறது. 

2. Identity Thief
முதலிடத்தில் இருந்த படம் சென்ற வார இறுதியில் 9.71 மில்லியன் டாலர்களை வசூலித்து இரண்டாமிடத்துக்கு வந்துள்ளது. இதுவரையான இதன் யுஎஸ் வசூல் 107 மில்லியன் டாலர்கள். 

3. 21 & Over
தி ஹேங்ஓவர் படத்தின் திரைக்கதையை எழுதிய Jon Lucas, Scott Moore இணைந்து இந்தப் படத்தை இயக்கியிருக்கிறார்கள். இவர்களின் முதல் இயக்குனர் அட்டெம்ட் இதுதான் என்பது முக்கியமானது. 13 மில்லியன் டாலர் செலவில் எடுக்கப்பட்ட படம் முதல் வார இறுதியில் 8.75 மில்லியன் டாலர்களை வசூலித்திருப்பதால் தயா‌ரிப்பாளர்களுக்கு நிம்மதி.

4. Snitch
Dwayne Johnson நடித்தப் படம் என்றால் யாருக்கும் தெ‌ரியாது. WWF ராக் என்றால் எல்லோருக்கும் தெ‌ரியும். ஸ்கார்பியன் கிங் உள்பட பல படங்களில் மசில் பவர் காட்டியவ‌ரின் புதிய படம். ஆச்ச‌‌‌ரியமாக படம் நன்றாக இருக்கிறது. இரண்டாவது வார இறுதியில் 7.77 மில்லியன் டாலர்களை வசூலித்திருக்கும் படம் சென்ற ஞாயிறுவரை 24.5 மில்லியன் டாலர்களை வசூலித்துள்ளது. 15 மில்லியன் டாலர்கள் செலவில் உருவான படம் இவ்வளவு பெ‌ரிய தொகையை அமெ‌ரிக்காவில் மட்டும் வசூலித்திருப்பதால்... பம்பர்ஹிட் என்கிறார்கள்.

5. The Last Exorcism Part II
ஹாலிவுட்டுக்கு பேய் படங்கள் என்றால் பணம் காய்க்கும் மரங்கள். டிசைன் டிசைனாக பேய்களை உருவாக்கிக் கொண்டேயிருப்பார்கள். அமெ‌ரிக்க மக்களும் இந்த பேய்களைப் பார்த்து டிசைன் டிசைனாக பயப்படுவார்கள். ‌ரிசல்ட்... கொள்ளை லாபம். இந்தப் படமும் பேய் படம்தான். சென்ற வாரம் வெளியான படம் முதல் மூன்று தினங்களில் 7.73 மில்லியன் டாலர்களை வசூலித்துள்ளது.

பழைய பதிவுகளை தேட

[blogger]

MKRdezign

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget