கண்பேசும் வார்த்தைகள் சினிமா விமர்சனம்


எஸ்பிசிசி ஸ்ரீபாலா‌ஜி சினி கி‌ரியேஷன்ஸ் சார்பில் ஆர்.சரவணகுமார் தயா‌ரித்திருக்கும் படம் கண்பேசும் வார்த்தைகள். ஷங்க‌ரின் உறவினரும் அவ‌ரின் எஸ் பிக்சர்ஸ் தயா‌ரித்த பல படங்களுக்கு தயா‌ரிப்பு நிர்வாகியாக இருந்தவருமான ஆர்.பாலா‌ஜி படத்தை இயக்கியுள்ளார். இவர் உயிர் படத்தின் தயா‌ரிப்பாளர் என்பது கொசுறு தகவல்.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சரவணன் மீனாட்சி தொட‌ரில் நடிக்கும் மிர்ச்சி செந்தில் இந்தப் படத்தின் மூலம் சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமாகிறார். கனவுகளுடனும், லட்சியத்துடனும் சிங்கப்பூர் செல்லும் அவர் இனியாவின் காதலில் தடுமாறுகிறார். லட்சியமா, காதலா என்ற இருதுருவங்களுக்கு நடுவில் அல்லாடுவது கதையின் ஒரு பகுதியாக வருகிறது, என்றாலும் காமெடிக்குதான் அதிக முக்கியத்துவம் தரப்பட்டிருக்கிறது என்கிறார்கள்.

தமிழகத்தில் படப்பிடிப்பு நடந்தாலும் பெரும்பகுதியை சிங்கப்பூ‌ரில்தான் படமாக்கியிருக்கிறார்கள். ஷமந்த் இசை, பாடல்கள் விவேகா. லிவிங்ஸ்டன் சிறிய இடைவெளிக்குப் பிறகு இதில் நடித்துள்ளார்.

அவமானப்பட்டவன் சாதிக்கணும்னு முடிவு பண்ணிட்டா, அவன் வேகமே வேறடா... இது படத்தில் வருகிற ஒரு டயலாக். பாலா‌ஜியும் அவமானப்பட்டதன் விளைவாக இதனை எடுத்திருப்பாரோ என்றொரு ஐயமும் உண்டு.

இன்று வெளியாகிற இந்தப் படம் யு சான்றிதழ் பெற்றுள்ளது.
பிரிவுகள்:

பழைய பதிவுகளை தேட

[blogger]

MKRdezign

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget