கோச்சடையான் கனவுகாண முடியாத சாதனைகள்


மோஷன் கேப்சர் தொழில்நுட்பத்தில் தயாராகும் இந்தியாவின் முதல் 3டி படமான கோச்சடையானின் சாதனைகள் ஆரம்பமாகிவிட்டது.  ர‌ஜினி நடிக்கும் இந்தப் படம் அவ‌ரின் மற்றப் படங்களைப் போலவே அதிக எதிர்பார்ப்பை கிளப்பியிருக்கிறது. தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய இந்திய மொழிகளில் வெளியாகவிருக்கும் இப்படத்தின் அமெ‌‌ரிக்க விநியோக உ‌ரிமையை Atmus Entertainment வாங்கியிருக்கிறது.
இதுவரை வந்த தமிழ்ப் படங்களில் இதன் விநியோக உ‌ரிமைதான் அதிக விலைக்கு விற்கப்பட்டிருக்கிறது. எத்தனை கோடிகள் என்பது தெ‌ரியவில்லை.

அதேபோல் தெலுங்கு உ‌ரிமையும் மிகப்பெ‌ரிய தொகைக்கு விற்கப்பட்டுள்ளது. வேறு எந்த நடிக‌ரின் படமும் கனவுகாண முடியாத தொகைக்கு இந்த விற்பனை நிகழ்ந்துள்ளது என்று கூறுகிறார்கள். ஆனால் இதனை கோச்சடையான் தயா‌ரிப்பாளர்கள் இன்னும் உறுதி செய்யவில்லை.