ஒன்பதுல குரு சினிமா விமர்சனம்

பெரிய எதிர்பார்புகளுக்கு இடையே வெளிவந்துள்ள படம் ஒன்பதுல குரு. இந்த படம் ஒரு சிறிய பட்ஜெட்  படம் என்றாலும் தமிழகம் முழுவது சுமார் 280 திரையரங்குகளில் வெளியானது. குறைந்த செலவில் வரும் படங்களுக்கு இத்தனை திரையரங்குகள் கிடைப்பது அவ்வளவு எளிதல்ல. ஒன்பதுல குரு படத்தில் வினய், அரவிந்த் ஆகாஷ், பிரேம்ஜி அமரன், லக்ஷ்மி ராய்,ஜெகன், மந்த்ரா, சோனா, மனோபாலா, கே.எஸ்.ரவிகுமார் மற்றும் நம்ம பவர் ஸ்டார்.
இவ்வளவு பெரிய நட்சத்திரபட்டாளத்தை வைத்து முதல் முறயாக இயக்கத்தை கையில் எடுத்துள்ளார் பி.டி.செல்வகுமார்.

இந்த படத்தை ஒரே பாதையில் கொண்டு செல்லாமல், கண்டமேனிக்கு ஓட விட்டு இருக்கிறார்கள். இந்த படத்தில் ஹாங்கோவர் படத்தின் தாக்கமும் , இன்று போய் நாளை வா படத்தின் தாக்கமும் அதிகம் தெரிகிறது. அதே போல பல முன்னணி நடிகர்களை நக்கல் செய்தும் படத்தை நகர்த்தியுள்ளர்கள். இதில் “தமிழ் படம்” சாயலும் தெரியாமல் இல்லை.

இயக்குனரின் முதல் படம் என்பது தெள்ளத்தெளிவாக தெரிகிறது. பல இடங்களில் காட்சி திணிப்பு, ஒரு நேர்த்தியான திரைக்கதை இல்லாதது மற்றும் இரண்டாவது பாதியில் ஏற்ப்படும் தொய்வு ஆகியவை பெரும் பலவீனம்.

இத்தனை நகைச்சுவை நடிகர்கள் இருந்தும் சத்யன், பிரேம்ஜி தவிர மற்றவர்களின் நகைச்சுவை பெரிதாக எடுபடவில்லை. சத்யனுக்கு நண்பன், துப்பாக்கி படங்களின் அனுபவங்கள் அவரை தனியாக காட்டுகிறது.  பல இடங்களில் வசனம் நன்றாக பளிச்சிடுகிறது.

இயக்குனரின் முக்கியமான காய் நகர்த்தல் பவர் ஸ்டாரை வைத்துதான். அந்த ஒரு பெயரை சேர்த்ததும் படத்தின் எதிர்பார்ப்பு கூடிவிட்டது. இயக்குனரும் அதை வைத்து நன்றாக படத்தை விளம்பரபடுத்திவிட்டார். இதில் இன்னார் தான் நாயகன் என்பது கிடயாது, படத்தில் அனைவரையும் முன்னிலைப்படுத்திவிடார்.

படத்தின் கதை சுருக்கம், திருமண வாழ்க்கையில் திருப்தி இல்லாத மூன்று நண்பர்கள் , ஒரே பெண்ணின் மீது ஆசை வருகிறது அந்த பெண்ணை தங்கள் வசப்படுத்துவதற்கு என்ன செய்கிறார்கள் என்பதுதான். படத்தில் பல நல்ல சுவாரசியங்கள் உண்டு , அதை கூறி படத்தின் எதிர்பார்ப்பை குறைத்துவிடக்கூடது என்பதால் இத்துடன் நிறுத்திக்கொள்கிறோம்.

படத்திற்கு இசை “கே”. வா மச்சி வா மச்சி கானா பாடல் முனுமுனுக்க வைக்கிறது.

மொத்தத்தில் ஒன்பதுல குரு , எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய தவறிய படம்.
பிரிவுகள்:

பழைய பதிவுகளை தேட

[blogger]

MKRdezign

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget