மனதுக்குள் கணக்கு போடும் நயன்தாரா

கோடம்பாக்கத்தில், வெற்றிகரமாக தன் இரண்டாவது இன்னிங்சை துவக்கியுள்ள நயன்தாராவுக்கு, சமீபகாலமாக, நியுமராலஜி எனப்படும், எண் கணித ஜோதிடத்தில் அதிக ஈடுபாடு ஏற்பட்டுள்ளதாம். நயன்தாராவின் ராசி எண், 5 என்பதால், தன்னுடைய கார் உள்ளிட்ட அனைத்து வாகனங்களுக்கான பதிவெண்களையும், 5 என்ற கூட்டு எண் வரும் வகையில் தான், கேட்டு வாங்கியுள்ளாராம்.
பொதுவாக, 5 என்ற ராசி எண்ணை உடையவர்கள் வாழ்க்கை, வெற்றிகரமாக இருக்கும் என்றும், குறிப்பிட்ட சில விஷயங்களில், அதிகமாக உணர்ச்சிவசப்படுவதால், வாழ்க்கையில், ஏற்றத் தாழ்வுகள் என்பது, வழக்கமான ஒரு விஷயமாகவும் இருக்கும் என்று, நம்பப்படுகிறது. நயன்தாராவின் வாழ்க்கையிலும், இதேபோன்ற சம்பவங்கள் அரங்கேறுவதால், நியுமராலஜியை பெரிதும் நம்பத் துவங்கியுள்ளார். எந்த ஒரு சின்ன விஷயமாக இருந்தாலும், மனதுக்குள்ளேயே கணக்கு போட்டு, நியுமராலஜி படிதான் செயல்படுகிறாராம்.