பவர் ஸ்டார் பிரச்சனையில் விஸ்வரூபம்


பவர்ஸ்டார் என்ற பெயரைக் கேட்டதும் டாக்டர் சீனிவாசன் நினைவிற்கு வருவது போல், ஆந்திராவில் பவர்ஸ்டார் என்றால் அது ஹீரோ பவன் கல்யாண் தான். பவர்ஸ்டார் தன்னை திரையுலகில் அறிமுகப் படுத்திக்கொண்டபோதே இந்த பிரச்சனை சிறிய அளவில் எழுந்தது. அதன் பிறகு எந்த பிரச்சனையும்
இல்லாமல் பவர்ஸ்டார் திரையுலகில் தானாகவே வளர்ந்தார். 

தமிழ், தெலுங்கு திரையுலகின் ரசிகர்களும் திரையுலகமும் வேறு வேறாய் இருந்தாலும் உலகம் முழுக்க கூகிள், யாஹூ சர்ச் இன்ஜின்ஸ் ஒன்று தான். பவன் கல்யான் ரசிகர்கள் அவரது புது படங்களைப் பார்க்க ’பவர்ஸ்டார்’ என்று டைப் செய்து தேட நம்ம ஊர் பவர்ஸ்டார் டாக்டர் சீனிவாசனின் அதிரடி ஃபோட்டோக்கள் வரிசையாக வந்து நிற்கின்றதாம்.

இதைக்கண்டு  கொதித்தெழுந்த பவன் கல்யான் ரசிகர்கள் டாக்டர் சீனிவாசன் ஃபோட்டோக்களை பிரிண்ட் எடுத்து கொடும்பாவிகளின் மீது ஒட்டி எரித்துவிட்டார்களாம். அதோடு விடாமல் கூகிள் மற்றும் யாஹு நிறுவனங்களுக்கு “பவர்ஸ்டார் என்று டைப் செய்தால், பவன் கல்யாண் ஃபோட்டோ வருவது போல் உங்கள் சிஸ்டமை மாற்றியமைக்க வேண்டும்” என இ-மெயில் அனுப்பிக்கொண்டு இருக்கிறார்களாம். 

பவர்ஸ்டார் என்ற பெயருக்கு டாக்டர் சீனிவாசன் ஃபோட்டோ வருவது அவரது விளம்பர யுக்திகளுள் ஒன்றாகக் கூட இருக்கலாம். சூப்பர்ஸ்டார் பட்டத்திற்கு சண்டை போட்டது நின்று பவர்ஸ்டார் என்ற பட்டத்திற்கு சண்டை போடவேண்டிய காலம் வந்துவிட்டது.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஒருவர் மனதில் காதல் இருப்பதை கண்டுபிடிப்பது எப்படி?

மொபைல் போன்களின் அனைத்து ரகசிய குறியிடு எண்கள்

பிளாகரில் வலைப்பதிவு புள்ளிவிவரம் விட்ஜெட்