உலக நாயகனுக்கு சூப்பர் ஸ்டார் அட்வைஸ்


விஸ்வரூபம் படத்தில் முதலீட்டுக்கு மேல் வந்த லாபத்தை வைத்து சொத்துகளை மீட்டு, அவற்றை பிள்ளைகள் பெயரில் எழுதி வைக்குமாறு சூப்பர் ஸ்டார் ரஜினி கமலுக்கு அட்வைஸ் செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது. விஸ்வரூபம் படம் வெளியாகி, நான்கு வாரங்கள் முடிந்துள்ளன. கிட்டத்தட்ட அனைத்துத் திரையரங்குகளிலிருந்தும் படம்
தூக்கப்பட்டுவிட்டாலும், அந்தப் படத்துக்காக கிளப்பப்பட்ட பரபரப்பால், கணிசமாக கமலுக்கு லாபம் கிடைத்துள்ளதாம்.

படம் குறித்து பல சர்ச்சைகள், அதிருப்திகள் இருந்தாலும், பல நெருக்கடிகளைத் தாண்டி வசூல் ரீதியாக ஓரளவு திருப்தியான வருமானத்தைக் கமல் பார்த்துவிட்டாராம்.

எனவே கமலுக்கு வாழ்த்து சொல்ல, தனக்கு நெருங்கிய எழுத்தாளருடன் கமல் வீட்டுக்குச் சென்றாராம் ரஜினி.
கமலுக்கு வாழ்த்து சொன்னவர், "கிடைச்சிருக்கிற பணத்தில் சொத்துகளை மீட்டு உங்கள் பிள்ளைகள் பேரில் எழுதி வையுங்க. இனிமேல் அடிக்கடி வீட்டை அடமானம் வைத்துவிட்டு படமெடுத்ததாக வெளியில் சொல்ல வேண்டாம். இது தேவையில்லாத ரிஸ்க். உங்களுக்கு தோதான தயாரிப்பாளர்களைப் பிடிச்சி உங்களுக்குப் பிடிச்ச கதையில் நடிங்க... இந்த நேரத்துல இதை சொல்லும் உரிமை எனக்கிருக்கு," என்றாராம்.

கமல் செய்வாரா... அல்லது மீண்டும் அடகு வைத்ததைச் சொல்ல பிரஸ் மீட் வைப்பாரா?

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஒருவர் மனதில் காதல் இருப்பதை கண்டுபிடிப்பது எப்படி?

மொபைல் போன்களின் அனைத்து ரகசிய குறியிடு எண்கள்

பிளாகரில் வலைப்பதிவு புள்ளிவிவரம் விட்ஜெட்