பரீக்ஷ்த் என்ற முனிவரின் மகன் ஜனமே ஜயன். அவனிடம், "உன் தகப்பனாரை தட்சன் என்ற பாம்பு கடித்ததால் தான் இறந்தார்...' என்று கலகம் செய்தார் வைசம்பாயனர் என்ற முனிவர். இதைக் கேட்ட ஜனமே ஜயன், "இதற்கு என்ன செய்யலாம்?' என்று கேட்டார். "சர்ப்ப யாகம் என்று ஒன்றுள்ளது; அந்த யாகத்தை செய். ஊரிலுள்ள சர்ப்பங்களெல்லாம் அதில் வந்து விழுந்து மடிந்து விடும்...' என்றார் வைசம்பாயனர்.
ஜனமே ஜயனும் அதற்கு ஒப்புக் கொண்டு, சர்ப்ப யாகம் நடத்துவதற்காக பெரிய பந்தல் ஒன்று போட்டான். அப்போது, அங்கு வந்தார் ஒரு ஸ்தபதி. பந்தல் போட்டுள்ள அமைப்பைப் பார்த்து, "இந்தப் பந்தல் எதற்காக போடப்பட்டுள்ளதோ, அந்தக் காரியம் நிறைவு பெறாது...' என்றார்.
"இது வாஸ்துபடி இல்லாததால், நடக்க இருக்கும் காரியம் நடை பெறாது...' என்றார்.
ஆனால், அதை அலட்சியம் செய்து, சர்ப்ப யாகம் செய்தான் ஜனமே ஜயன். அதில், பல சர்ப்பங்கள் வந்து விழுந்து மாண்டன. சர்ப்ப யாகம் நடந்து கொண்டிருந்த போது, அங்கே ஆஸ்தீகர் என்ற முனிவர் வந்தார்.
சர்ப்பங்கள் ஹோம குண்டத்தில் வந்து விழுவதைப் பார்த்த முனிவர், "போதும், யாகத்தை நிறுத்துங்கள்...' என்றார். முனிவர் சொல்லி விட்டதால், ஜனமே ஜயனும் யாகத்தை நிறுத்தி விட்டான். அந்த ஹோமகுண்டத்தில் தட்சனும் வந்து விழ வேண்டிய சமயத்தில், முனிவர் வந்து சொன்னதால் யாகம் நின்று விட்டது.
ஸ்தபதி சொன்னபடி, இந்த யாகம் பூர்த்தியாகவில்லை. காரணம், பந்தல் அமைத்தது வாஸ்துபடி இல்லாதது தான்; இதைத்தான் ஸ்தபதி சொன்னார். அதனால், மனை வாங்கும் போதும், வீடு கட்டும் போதும், மனையடி சாஸ்திரம், வாஸ்து சாஸ்திரம் இவைகளை அனுசரிக்க வேண்டும். அப்படிச் செய்தால் தான் மனையும், வீடும் சுபிட்சமாக இருக்கும். சாஸ்திரத்தில் நம்பிக்கை இருக்க வேண்டும்.
கவிஞர் கண்ணதாசனின் அர்த்தமுள்ள இந்துமதம்!
- இந்து, முஸ்லிம், கிறிஸ்தவம் ஆகிய மதங்களின் ஆலய கோபுரங்கள் வெவ்வேறு விதமாக இருக்கிற தெனினும், நம் இந்து கோவில்களின் கோபுரங்கள் வடக்கில் ஒருவிதமாகவும், தெற்கில் மற்றொரு விதமாகவும் அமைந்திருக்கக் காரணம் என்ன?