பொது இடங்களில் மகளிர் தவிர்க்க வேண்டிய பழக்கங்கள்


பெண்கள் என்ன தான் சுத்தமாக இருந்தாலும், அவர்களிடம் ஒருசில கெட்ட விஷயங்கள் உள்ளன. அத்தகைய நடத்தைகள் வீட்டிற்குள்ளேயே இருந்தால் பரவாயில்லை. ஆனால் பொது இடங்களில் செய்யக்கூடாத செயல்களையெல்லாம் செய்கின்றனர்.  உதாரணமாக, பொது இடங்களில் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுப்பது. இது குழந்தையின் பசியைப் போக்க செய்யும் ஒரு நல்ல விஷயம் தான். இருப்பினும் இதனை பொது இடங்களில் முடிந்த அளவில் செய்யாமல் இருப்பது சற்று நன்றாக இருக்கும்.

இதுப் போன்ற நிறைய செயல்களை பெண்கள் பொது இடங்களில் சிறிதும் நினைக்காமல் செய்வதால், அவை பொது மக்களின் மனதில் பதிந்து விடுவதோடு, பெண்களைப் பற்றிய கற்பனையான எண்ணமும் மனதில் ஏற்படுகிறது. எனவே அத்தகைய செயல்களை பெண்கள் தவிர்ப்பது நல்லது. 
  • பொதுவாக பெண்கள் அழகிற்கு முக்கியத்துவம் கொடுப்பார்கள் என்று அனைவருக்குமே தெரியும். அதற்காக அவர்கள் எங்கு கண்ணாடியைப் பார்த்தாலும், உடனே தங்கள் அழகை பார்த்து ரசிப்பது, சரிசெய்வது என்று செய்வார்கள். இத்தகைய செயலை மற்றவர்கள் பார்க்கும் போது, அது சரியான நகைச்சுவையாகத் தான் இருக்கும். 
  • சில பெண்கள் உடுத்தும் உடைகளை வீட்டிலேயே சரியாக அணிந்து கொண்டு வராமல் இருப்பார்கள். இதனால் உள்ளாடையானது வெளியே அடிக்கடி தெரியும். அவ்வாறு தெரியுமாறு உடை உடுத்தியிருப்பதோடு, அதனை அடிக்கடி சரிசெய்வதால், அத்தகைய செயல் நிச்சயம் ஆண்களின் பார்வையை தூண்டி விளையாடும். 
மேலும் அவ்வாறு சரிசெய்யும் போது ஆண்கள் பார்த்துவிட்டால், உடனே கூச்சலிட்டு ஆர்ப்பாட்டம் செய்வார்கள். இதில் தவறு நிச்சயம் பெண்கள் மீது தான். பெண்கள் ஒழுங்காக இருந்தால், நிச்சயம் ஆண்களும் ஒழுங்காக இருப்பார்கள். 
  • சில பெண்கள் சரும பராமரிப்பு என்று அடிக்கடி மேக்-கப் செய்வார்கள். அதற்காக ஒரு சிறிய மேக்-கப் ரூமையே கைகளில், ஹேண்ட் பேக் என்ற பெயரில் வைத்து சுற்றுவார்கள். மேலும் கொஞ்சம் வியர்த்துவிட்டாலும், பொது இடம் என்றும் பார்க்காமல், பொது இடத்திலேயே சிலர் மேக்-கப் செய்வார்கள். இதை மற்றவர்கள் பார்த்தால் எப்படியிருக்கும் என்று சற்று எண்ணிப் பாருங்கள். 
  • சில பெண்கள் சிறிய ஆடைகளை அணிவார்கள். அவ்வாறு உடுத்தியிருக்கும் ஆடை சிறியதாக, குட்டையாக இருக்கிறது என்று தெரிந்தும், சிலர் பொது இடங்களில் கால் மேல் கால் போட்டு உட்கார்ந்து கொள்கின்றனர். 
  •  பொது இடங்களில் அளவுக்கு அதிகமான சத்தத்துடன் பேசுவது. பெண்கள் அமைதி, பொறுமை என்று தான் தோன்றும். ஆனால், சில பெண்கள் ரோட்டில், பேருந்துகளில் சற்று உணர்ச்சவசப்பட்டால், யார் இருக்கிறார்கள் என்று சிறிதும் பராமல், பேசுகின்றனர்.
இத்தகைய செய்கையால் எல்லா பெண்களின் மீதும் தவறான எண்ணம் ஏற்படுகிறது. எனவே பெண்கள் இத்தகைய செய்கைகளை தவிர்ப்பது மிகவும் நல்லது. 

பழைய பதிவுகளை தேட

[blogger]

MKRdezign

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget