கருவை கலைக்கும் மது பானம்


கர்ப்பமாக இருக்கும் போதோ அல்லது கர்ப்பத்திற்கு முயற்சிக்கும் போதோ ஆல்கஹால் (மது) சாப்பிட்டால், கருச்சிதைவு ஏற்படும் வாய்ப்புக்கள் உள்ளது. எனவே தான், கர்ப்பிணிகள் மற்றும் கர்ப்பத்திற்கு முயற்சிப்போரிடம், ஆல்கஹால் பருக வேண்டாம் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.

தற்போது ஆரோக்கியமற்ற பழக்கவழக்கங்களாலேயே கருச்சிதைவு ஏற்படுகிறது. அவற்றில் ஒன்றான ஆல்கஹால் குடித்தால் கண்டிப்பாக கரு சிதைவு ஏற்பட அதிக வாய்ப்புகள் உள்ளது. ஆகவே குழந்தை நன்கு ஆரோக்கியமாக வளர வேண்டும் என்று நினைப்பவர்கள், கர்ப்பத்தின் போது ஆல்கஹால் பருகாமல் இருக்க வேண்டும். 

- கர்ப்பத்தின் போது மது குடித்தால் ஏற்படும் பாதிப்புகள் பற்றி பல ஆய்வுகள் செய்யப்பட்டன. அந்த ஆய்வுகளில் 4-5 டம்ளர் ஆல்கஹால் குடித்தால், முதல் மூன்று மாதங்களில் கருச்சிதைவு ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. ஒருவேளை அவ்வாறு முதல் மூன்று மாதங்களில் கருச்சிதைவை ஏற்படுத்தாவிட்டாலும், வயிற்றில் உள்ள கருவிற்கு எந்நேரத்திலும் ஆபத்தை ஏற்படுத்தும். 

- பொதுவாக கருச்சிதைவு ஏற்படுவதற்கு மிக முக்கிய காரணம் கருமுட்டையில் உள்ள சைட்டோபிளாசத்தில் ஏதாவது மாற்றம் ஏற்படுவதே ஆகும். ஏனெனில் சைட்டோபிளாசம் கருமுட்டையை பாதுகாக்கும் ஒரு படலம். அத்தகைய படலத்தில் ஆல்கஹால் படும்போது, அதில் உள்ள அமிலமானது படலத்தில் இடையூறு உண்டாக்கி, இறுதியில் கருச்சிதைவிற்கு வழிவகுக்கிறது. 

- ஆல்கஹால் குடித்தால், கருச்சிதைவு ஏற்படாவிட்டாலும், அதன் பின் குழந்தையின் வளர்ச்சி, மனநிலை பாதிப்பு, நடத்தையில் பிரச்சனை, முகம் சார்ந்த குறைபாடுகள், நரம்பு செயலிழப்பு போன்றவை ஏற்படும். அதுமட்டுமின்றி, சில நேரங்களில் கர்ப்பிணிகளுக்கே இதயம், நரம்பு மண்டலத்தில் பிரச்சனைகள் ஏற்படும். 

- நிறைய கர்ப்பிணிகள் கர்ப்பத்தின் ஆரம்ப காலத்தில் குடித்தால் தான் கருச்சிதைவு ஏற்படும், இரண்டாம் மற்றும் மூன்றாம் பருவ நிலைகளில் பருகினால், கருச்சிதைவு ஏற்படாது என்று நினைக்கின்றனர். அது உண்மை தான். ஆனால் கருச்சிதைவிற்கு பதிலாக, குழந்தையின் வளர்ச்சி மற்றும் வேறு சிலவற்றில் குழந்தைக்கு பிரச்சனை அதிகம் ஏற்படும். 

- ஆல்கஹால் பருகினால், அவை இனப்பெருக்க மண்டலத்திற்கே பெரும் பாதிப்பை உண்டாக்கும். ஒருவேளை அளவுக்கு அதிகமாக குடித்தால், கருச்சிதைவு ஏற்பட்டு, பின் எப்போதுமே கர்ப்பம் தரிப்பதற்கு போவதற்கு அதிக வாய்ப்பு உள்ளது. 

எனவே இத்தகைய கருத்துக்களை மனதில் கொண்டு கர்ப்பிணிகள் மது அருந்துவதை தவிர்க்க வேண்டும். நீங்கள் செய்யும் சிறு தவறு உங்கள் குழந்தையின் எதிர்காலத்தில் கேள்விகுறியாக்கிவிடும். 

பழைய பதிவுகளை தேட

[blogger]

MKRdezign

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget