நோய்கள் பொதுவாக சூழல், மரபணு, லைஃப்ஸ்டைல், பழக்கவழக்கங்கள் ஆகியவற்றால் உருவாகிறது என்றாலும். ஒவ்வொரு ராசிக்கும் பிரத்யேகமான நோய்க்குறிகள் உண்டு என்கிறார் வாஸ்து நிபுணர் ரவி ஓஜஸ். அவர் மேஷம் முதல் மீனம் வரை உள்ள ராசிகளின் பிரத்யேகமான நோய்களாக சிலவற்றை அடையாளப்படுத்துகிறார்.
மேஷம்: தலைவலி, நரம்பு மண்டலம் சம்பந்தமான நோய், ஆழ்நிலை மயக்கம், நினைவிழந்த நிலை, மூளை நோய், மூளையில் ரத்தப்போக்கு, தூக்கமின்மை, வீக்கமுண்டாகும் நோய்கள், தலை முகம் பாதிக்கும் வலி, முகப்பரு, மூக்கில் வளரும் நீர்ச்சதை, ஒருபக்கத் தலைவலி, தலைசுற்றல், கிறுகிறுப்பு, மூளைக் காய்ச்சல், வட்டமான இள வழுக்கை போன்றவை.
ரிஷபம்: வறண்ட தொண்டை, கழுத்துச் சுரப்பிகளின் வீக்கம், டான்சில் வீக்கத்தால் சீழ் கட்டிப் போதல், மூச்சுக்குழாய் அடைப்பு, பொன்னுக்கு வீங்கி (எச்சில் ஊறும் கோளங்களில் கோளாறு), தைராய்டு சுரப்பிகளில் குறைபாடு, தொண்டை அடைப்பான் நோய், புலன்களின் தசைகளைத் தாக்கும் நோய், தலையில் உண்டாகும் தசை முண்டு, காற்றுக்குழாயில் சீழ் பிடித்தல், கண்டமாலை (கழுத்தில் ஏற்படும் வீக்கம்), நெஞ்சு வலி போன்றவை.
மிதுனம்: ஆஸ்துமா, சளியினால் காய்ச்சல், சுவாசக்குழாய் நோய், இருதய உறை, நுரையீரல் மேலுறையில் உப்புச்சத்துகள் மிகுந்து நீர் தங்கிப்போதல், நுரையீரல் நோய்கள், சளித் தொந்தரவு, வறண்ட இருமல், இருதயத்தை சூழ்ந்துள்ள தோலுறை வீக்கம், காசநோய், கைகளில் பாதிப்பு, சுவாச முறையில் பலவித கோளாறுகள், ரத்தம் கெட்டுப் போதல் போன்றவை.
கடகம்: வயிற்றுப்புற்றுநோய் மற்றும் வயிற்றுவலி, வாய்வுக்கோளாறு, நீர்கோத்துக் கொள்ளல், அஜீரணம், தீவிர இருமல், நோய் இருப்பதாகவே கலக்கமுற்று இருக்கும் மனோவியாதி, மஞ்சள் காமாலை, ரத்த சோகைக்கு முன் ஏற்படும் மஞ்சள் கலந்த பச்சை நிறத்தோற்றம், பித்தப்பை கல், நீரிழிவு நோய் போன்றவை.
சிம்மம்: இருதய நோய், இருதய படபடப்பு, மூட்டு நோயினால் காய்ச்சல், தண்டுவடம் பாதிக்கும் கொடிய நோய், வெய்யில் தாக்க்ம், தளர்ச்சி, ரத்த ஓட்டத்தில் ரத்த வால்வுகளின் குறையினால் சீரற்ற கன்னம், தள்ளாட்டம், உயர் ரத்த அழுத்தம், தீவிர ஆனால் தற்காலிக நெஞ்சு வலி, தமனி வீக்கம், நெஞ்சடைப்பால் ஏற்படும் திடீர் மயக்கம், அடிக்கடி மயக்கம் ஏற்படல், கூன் முதுகு, பிளேக் போன்ற கொள்ளை நோய், ரத்த சோகை, ரத்தக் குழாய் சுவர் தடித்து போதல் போன்றவை.
கன்னி: இடுப்பு சம்பந்தமான இடையூறுகள், சில்லிட்ட உடல்நிலை, வயிற்றில் நாடாப்பூச்சி, பண்டப்பூச்சி, கொக்கிப் பூச்சி, வயிற்றுப் போக்கு, காலரா நோய், அடிவயிற்று வீக்கம், மலச்சிக்கல், கெடுதியான உணவுப்பழக்கம், வைட்டமின் பி குறைவு, உணவு செரிமான அமிலத்தை ஏற்காமை, குடல் சம்பந்தமான கோளாறுகள்.
துலாம்: நாசிக்குழாயில் கட்டி, சிறுநீரக நரம்புகளில் சீர்கேடு, சிறுநீரக குடல்வால் அழற்சி, சிறுநீர் வெளியேறாமல் அடைப்பு, குடல் இறக்கம், சிறுநீரக வீக்கம், மூத்திரக்காய் வீக்கம், கர்ப்பப்பை வீக்கம் வலி, வலுவற்ற கீழ் முதுகு, இடுப்பில் வாயுப்பிடிப்பு, வலி, இடுப்புப்பட்டை கோளாறு, மூட்டு வலி, சொறி சிரங்கு, தோல்வியாதி, கட்டளை நரம்பு மண்டல பாதிப்பு போன்றவை.
விருச்சிகம்: பித்தப்பை பாதிப்பு, பெருங்குடல் அழற்சி, கர்ப்பப்பை உபாதை, உற்பத்தி உறுப்பு உபாதை, மலக்குடல் உபாதை, கர்ப்பப்பை, சினைப்பை உபாதைகள், மாதவிலக்கு ஒழுங்கின்மைகள், வெள்ளைப்படுதல், ம்லவாயில் வெடிப்புகள், சிறுநீரகத்தில் கல், பவுத்திரம், மூல நோய், பால்வினை நோய், விதைப்பையில் காயம் போன்றவை.
தனுசு: இடுப்பு தொடைகளுக்கு பாதிப்பு, சுயமாய் நடமாடுவதில்-அசைவில் தடுமாற்றம், தொடை எலும்பில் உபாதை, சிறுகுடல் கேடால் காய்ச்சல், க்ணுமூட்டு வீக்கத்தால் வலி, இடுப்பு எலும்பு இடம்பெயர்ந்து போதல், ரத்த ஒழுங்கின்மை, சுவாச உபாதை போன்றவை.
மகரம்: முழங்கால் சில்லு எலும்பு, முழங்கால் பின்புற பள்ளம் ஆகிய பாதிப்புகள் ஏற்படல், தொழு நோய், வெண்குஷ்டம், ஜீரண உறுப்பு கோளாறு, மூட்டு நோய், மூட்டுவலி, நரம்பு சம்பந்தமான நோய், மனநிலை தளர்ச்சியால் விரக்தி மனப்பான்மை, கவலை, இரத்த பாதிப்பு, சொறி, சிரங்கு, தோல் தடிப்பு, ஒவ்வாமை, தோல் கறுத்துப் போதல், ஹிஸ்டீரியா போன்றவை.
கும்பம்: இருதய உபாதை, மாரடைப்பு, மூட்டு வலி, தோல்நோய், இரத்த அழுத்தம், இருதய சீர்நிலை பாதிப்பு, கல்வீக்கம், பல்வேறு நரம்பு வியாதிகள், கணுக்கால் பிசகுதல், கணுக்கால் வீக்கம், சுளுக்கு, இரத்த சோகை, கீழே விழுதல், இரத்தம் நஞ்சாகுதல், இருதய வலுவின்மை, கண் உபாதைகள் போன்றவை.
மீனம்: பாத நோய்கள், மற்றும் பாத ஒழுங்கின்மை, பாத வீக்கம், மூட்டுகளில் வீக்கம், ஆணுக்கு பெண் குரலும், பெண்ணுக்கு ஆண் குரலுமாக மாற்றம் ஏற்படல், நுரையீரல் சிக்கல் மற்றும் மலச்சிக்கல், தொற்று நோய்கள் குடல் பாதிப்பு, போதைவஸ்து, குடியினால் வரும் மன நோய் போன்றவை.