பேய்க்கு முதல் மரியாதை தந்த ஹாலிவுட்

1981 ல் அந்தப் படம் வெளிவந்தது. இந்தியாவில் அப்படம் வெளியான போது, தனியாக படத்தை தைரியமாகப் பார்த்தால் பரிசு தரப்படும் என்றெல்லாம் அறிவித்தார்கள். படம் பார்த்தவர்களில் பலர் அதிர்ச்சியில் இதயம் துடிக்க மறந்து உயிர்விட்டதாகவும் சேதிகள் வந்தன. அனைவரையும் உலுக்கிய அந்த பேய்ப்படம், ஈவில்டெட் (இதன் பிறகு பிரைன் டெட் என்றொரு படத்தை எடுத்தனர். படத்தில் எத்தனை பேய்கள் வருகிறது என்று சரியாக சொல்பவர்களுக்கு பரிசு அறிவித்தார்கள்.
அந்தளவுக்கு படம் முழுக்க பேய்கள்... பேய்கள். பார்க்க சகிக்காத பேய்ப் படங்களில் பிரைன் டெட்டுக்கு எப்போதுமே முதலிடம்).

ஓகே. இனி பேக் டு ஈவில் டெட்.

ஐந்து நண்பர்கள். அடர்ந்த கானகத்திலுள்ள ஒரு மர வீடு. இரவு தங்கல். எதிர்பாராதவிதமாக அங்குள்ள ஆவிகளை எழுப்பிவிடுகிறார்கள். அப்புறம்....

அதை திரையில் பார்ப்பதுதான் சுவாரஸியம்.

சுமாரான வெற்றி பெற்றாலே இரண்டாம், மூன்றாம் பாகம் என கழுதையை கட்டெறும்பாக தேய்ப்பவர்கள் ஈவில்டெட்டின் மூன்று பாகத்தை எடுத்தார்கள். நான்காவது அதேபெயரில் சென்ற வாரம் வெளியானது. அதே ஐந்து நண்பர்கள், அதே அடர்ந்த வனம், அதே மரவீடு.... ஆனால் த்ரில்லிங் மட்டும் மிஸ்ஸிங்.

முதல் பாகத்தின் கதையை அப்படி இப்படி கொஞ்சமாக மாற்றி நான்காவது பாகத்தை எடுத்திருக்கிறார்கள். அப்படியே மொத்தமாக காட்சிக்கு காட்சி எடுத்தால் ரீமேக். மெயின் கதையை வைத்து காட்சிகளை வெட்டி ஒட்டி மாற்றி எடுத்தால் அது ரீபூட். சென்ற வாரம் வெளியானது ரீபூட்.

படம் வேஸ்ட் என விமர்சகர்கள் எழுதினாலும், எதிர்பார்ப்பு காரணமாக முதல் மூன்று தினங்களில் 25.8 மில்லியன் டாலர்களை வசூலித்து யுஎஸ் பாக்ஸ் ஆபிஸில் முதலிடத்தைப் பிடித்துள்ளது.

பேய்க்கு முதல் மரியாதை....?

பழைய பதிவுகளை தேட

[blogger]

MKRdezign

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget