இரும்பு பெண்மணி ஜெயா - விக்கிலீக்ஸ்


விடுதலைப்புலிகளை தமிழக அரசியல் கட்சிகள் எவ்விதமாக கையாண்டன என்பது குறித்து விக்கிலீக்ஸ் தகவல்களை வெளியிட்டுள்ளது. அதில் திமுக தலைவர் கருணாநிதி மற்றும் அதிமுக பொது செயலாளர் ஜெயலலிதா குறித்து சில செய்திகள் இடம்பெற்றுள்ளன. விக்கிலீக்ஸ் வெளியிட்டுள்ள செய்தியில், உலகம் முழுக்க ஒவ்வொரு நாட்டிலும்
உள்ள அமெரிக்க தூதரகங்கள், அந்த நாட்டின் முக்கிய நிகழ்வுகளை தொகுத்து உடனுக்குடன் அமெரிக்காவுக்கு அனுப்பி வைப்பதை நடைமுறையாக கொண்டுள்ளன.

அந்த வரிசையில் தமிழ் நாட்டு அரசியல் கட்சிகளிடம் 1980, 1990களில் விடுதலைப்புலிகள் எத்தகைய செல்வாக்கு பெற்றிருந்தனர், இலங்கைக்கு இந்திய அமைதிப்படை சென்ற பிறகும், அதன் பிறகும் விடுதலை புலிகளுக்கு ஏற்பட்ட வீழ்ச்சி பற்றி சென்னையில் உள்ள அமெரிக்க தூதரகம் வாஷிங்டனுக்கு அனுப்பிய தகவல்களை தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக சென்னையில் இருந்து 1990 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதமும், 2009 ஆம் ஆண்டு மார்ச் மாதமும் வாஷிங்டனுக்கு அனுப்பப்பட்ட தகவல்களை விக்கிலீக்ஸ் வெளியிட்டுள்ளது.

இந்த குறிப்பில் விடுதலைப்புலிகள் விவகாரத்தில், தமிழக அரசியல் கட்சி தலைவர்களான கருணாநிதியும், ஜெயலலிதாவும் எப்படி மாறுபட்ட விதத்தை கையாண்டார்கள் குறித்த தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.

அதன்படி, விடுதலைப்புலிகள் விஷயத்தில் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா குறித்து சென்னையில் உள்ள அமெரிக்க தூதர் ஆண்ட்ரூ டி சிம்கின், 2009 ஆம் ஆண்டு மார்ச் மாதம், அனுப்பிய செய்தியில் கூறியிருப்பதாவது, ‘ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்ட பிறகு தமிழ்நாட்டில் முதல்வராக பொறுப்பு ஏற்ற ஜெயலலிதா, தமிழ்நாட்டில் விடுதலைப்புலிகளை முற்றிலுமாக ஒடுக்க உத்தரவிட்டார்.

இதை வைத்து பார்க்கும் போது ஜெயலலிதா இரும்பு பெண்மணியாக திகழ்வது தெரிகிறது. அவரது துணிச்சலான, உறுதியான நடவடிக்கைகளால்தான் தமிழ் நாட்டில் நீண்ட காலமாக இருந்த விடுதலைப்புலிகளின் ஆதிக்கம் முடிவுக்கு வந்தது' என அந்த தகவல் தொகுப்பில் கூறப்பட்டு இருந்ததாக விக்கிலீக்ஸ் இணையத்தளத்தில் கூறப்பட்டுள்ளது.

இதற்கு மாறாக திமுக தலைவர் கருணாநிதி குறித்து 1990 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் அனுப்பப்பட்ட குறிப்பில், விடுதலைப்புலிகள் மீதான பயம் காரணமாகவே, கருணாநிதி அந்த அமைப்பை ஆதரித்தார் என்ற சந்தேகம் உள்ளது என்று குறிப்பிடபட்டிருந்தது.

பழைய பதிவுகளை தேட

[blogger]

MKRdezign

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget