
உடலை பேணுவது மிகவும் முக்கியம். மனிதனுக்கு உடம்பில் இருக்கும் உடல் பிரச்சனைகளில் ஒன்று உடல் பருமன் அல்லது மெலிவான உடல் அமைப்பு. சரியான அளவு கொண்ட உடல் அமைப்பை ஏற்படுத்த பல வழிகள் உண்டு. அப்படி உடலை ஒரு கட்டமைப்புக்கு கொண்டு வந்தால் அழகுடன் சேர்ந்து ஆரோக்கியமும் நம்மை தொற்றிக் கொள்ளும்.
ஆண்கள் 6-பேக் (6-pack) வயிற்று அமைப்பை கொண்டு வருவதற்கு, அதீத பயத்துடன் அல்பட்ரோஸ் பறவையை பிடிப்பதை போல் காத்திருக்கிறார்கள். அனைத்து ஆணும் நல்ல ஆரோக்கியமான உடல் கட்டமைப்புடன் இருந்து 6-பேக் வயிற்று அமைப்பை கொண்டு வந்து கொழுத்த உடலை கரைக்க வேண்டும். அதனை கீழ்கண்ட வழிகளால் எளிதில் அடையலாம்:
வீங்கிய வயிறு தொந்தியாக மாறுவதற்கு முன் அதனை குறைத்திட வேண்டும். அதற்கு கீழே சொல்லியிருக்கும் சில வழிகளை கடைப்பிடித்து, வயிற்றை கட்டுகோப்பாக வைத்திருங்கள்.
சில தீவிர இதயப் பயிற்சிகளை மேற்கொள்வதை தவிர உடம்பில் உள்ள கொழுப்பின் அளவை வேகமாக குறைக்க வேறு வழி இல்லை. உயர்ந்த இதயத் துடிப்பு மற்றும் வியர்வை உடம்பை விட்டு வெளியேறுவதால், கொழுப்புத் திவலைகளை சிதைக்க உதவி புரியும். இது செல்லுலைட் என்ற தோளில் தேங்கியிருக்கும் கொழுப்பை வேகாமாக சிதைக்க உதவும். இதற்காக மிதிவண்டி ஓட்டுதல், ஓடுதல், நீந்துதல் மற்றும் நடனம் செய்தால் சில கிலோகிராம் எடை நம் உடலை விட்டு ஓடும்.
எடை குறைப்புக்கு வளர்ச்சிதை மாற்ற விகிதத்தை அதிகமாக வைத்திருப்பது முக்கிய பங்கு வகிக்கிறது. அதிலும் செய்யும் உடற்பயிற்சிக்கு பின்னரும் கூட, அதிகப்படியான வளர்ச்சிதை மாற்றமானது கொழுப்பை எரிக்கும். அதிக வளர்ச்சிதை மாற்ற வீதத்தை அடைய ஒருவர் அளவான உணவை போதிய இடைவெளியில் சாப்பிட வேண்டும்.
காலை உணவென்பது மற்ற வேளைகளில் உண்ணும் உணவை விட மிகவும் முக்கியமான ஒன்று. அதனால் அதை தவிர்ப்பது நல்லதல்ல. காலை உணவு என்பது இரவு தூக்கத்தினால் ஏற்படும் நீண்ட விரதத்தை முடிக்க பயன்படுத்தும் உணவு. எனவே காலை எழுந்து ஒரு மணி நேரத்திற்குள் காலை உணவை எடுத்துக் கொண்டால், வளர்ச்சிதை மாற்ற விகிதத்தை நாள் முழுவதும் அதிகமாக வைக்க உதவும்.
சில சமயங்களில் பளு தூக்குவதால், மீள்வரு தசைகளில் உண்டாகும் செல்லுலைட் என்ற தோள்களில் படியும் கொழுப்பை கரைக்க உதவும். பளு தூக்கும் பயிற்சி உடல் கட்டமைப்பை அதிகரிக்க மட்டுமல்லாமல் உடல் கட்டமைப்பை குறைக்கவும் உதவும்.
உடம்பில் உள்ள கொழுப்பை நீக்கியதும், 6-பேக் வயிற்றுடன் உடலை கட்டமைக்க தசைகளை வலுப் பெறச் செய்ய வேண்டும். அதற்கு சில உடற்பயிற்சிகளை செய்தால் சரியான கட்டமைப்புடன் வயிறு அமையும்.
வயிற்றுக்கான உடற்பயிற்சி செய்தோமானால், வயிற்று தசைகளுக்கு சரியான அளவு இழுவிசை இளக்கத் தன்மையை கிடைக்கும். அதுவும் தரையில் படுத்து, முட்டியை மடக்கி கைகளை தலைக்குப் பின்னால் கட்டிக் கொண்டு, தலை, முட்டியை தொடும் அளவிற்கு உடம்பை தூக்க வேண்டும். இந்த உடற்பயிற்சி மேல் மற்றும் நடு வயிற்றை குறி வைக்கும். இந்த பயிற்சியை உடம்பின் இரு பக்கங்களாக செய்தால் சரிவுள்ள தசைகள் மேம்படுத்தும்.