பெண்களை அதிகம் தாக்கும் மூட்டு வலிகள்


தோள்பட்டை, கழுத்து, முதுகு, இடுப்பு, கை, கால் மூட்டு வலியைப் போன்று கால் பாதங்களில் அதாவது கணுக்காலில் வலி ஏற்படுகின்றது. இந்த கணுக்கால் வலி ஆண்களை விட பெண்களையே அதிகம் பாதிக்கும். கணுக்கால் வலியானது 35 வயது முதல் ஆரம்பிக்கத் தொடங்கும். உடற்கூறுகளின் தன்மையைப் பொறுத்து இதன் பாதிப்பு இருக்கும். பெண்களுக்கு மாத விலக்கு காலங்களில் ஒழுங்கற்ற உதிரப்போக்கு, நாள்கடந்த மாதவிலக்கு,
ஜலதோஷம் போன்றவற்றால் கணுக்காலில் வலி உண்டாகும். அஜீரணக் கோளாறு, மலச்சிக்கல் உள்ளவர்களுக்கும், வாயு நீரானது வாத நீராக மாறி கணுக்காலில் தங்கி வலி ஏற்படுத்தும். 

இப்படி உடல் கூறுகளின் தன்மையைப் பொறுத்து கணுக்காலில் தங்கும் நீரானது உப்புப் படிவமாக மாறி கட்டிபோல் உருவாகின்றது. இதை சிலர் எலும்பு வளர்ந்திருப்பதாகக் கூறுவார்கள். உப்பும் சுண்ணாம்புச் சத்தும் இணைவதால் திடப் பொருளாக மாறும். உடம்பில் உள்ள சர்க்கரையும் சேர்வதால் எலும்புபோல் உறுதியாகிறது. 

உடல் எடை அதிகரித்தாலும் கணுக்கால் வலி உண்டாகும். உடலில் இரும்புச் சத்து குறைவதாலும் கணுக்கால் வலி உண்டாகும். இதனால் இரும்புச் சத்து நிறைந்த பழங்கள், கீரைகள் போன்றவற்றை உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். தினமும் 1/2 மணி நேரமாவது நடைபயிற்சி செய்வது நல்லது. அதிகமாக நீர் அருந்த வேண்டும்.

பழைய பதிவுகளை தேட

[blogger]

MKRdezign

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget