கர்ப்பமாக இருக்கும் பெண்களுக்கு பிரசவம் ஆகும் வரை தன் உடல் நிலையையும் வயிற்றில் வளரும் குழந்தையையும், கவனமாக பார்த்துக் கொள்வது முதல் கடமை என்றால், குழந்தை பிறந்த பிறகோ அதற்கு தாய்ப்பால் கொடுப்பதற்கும், குழந்தையைக் கவனித்துக் கொள்வதற்கும் தன்னுடைய பச்சை உடம்பு
வலுப்பெறுவதற்கும், தன்னை முன்னைவிட நன்றாக கவனித்துக் கொள்வது ரொம்ப ரொம்ப முக்கியம். இதற்கு சத்தான உணவுகள் மட்டும் போதாது. மருத்துவருடைய ஆலோசனையின்படி உடற்பயிற்சிகளையும் செய்ய வேண்டும். ஒரு தாய் நல்ல ஆரோக்கியத்துடன் இருந்தால்தான் அவள் குடும்பமும் ஆரோக்யமாக இருக்க முடியும்.
அதிலும் குறிப்பாக பிரசவமான பெண்கள் உடலின் உள் ஆரோக்கியத்தை மட்டும் பார்க்காமல், வெளி ஆரோக்யத்தையும் அதாவது எக்ஸர்சைஸ் மூலம் உடலையும் ஷேப்பாக சிக்கென்று வைத்துக் கொள்ளுங்கள். உங்கள் தாம்பத்யமும் தடுமாறாமல் செல்லும்! என்னென்ன உடற்பயிற்சிகள் செய்ய வேண்டும்?
* நார்மல் டெலிவரி எனில், சில வாரங்களிலேயே வயிற்றுத் தசைகள், இடுப்புத் தசைகள் சுருங்கப் பயிற்சிகள் செய்ய வேண்டும். இப்பொழுது அந்தப் பயிற்சிகளைச் செய்தால்தான் 50, 60 வயதுகளில்கூட பிறப்புறுப்பின் ‘தசைகள்’ வலுவாக இருக்கும்.
* உடற்பயிற்சிகள் செய்தால்தான் ஹெர்னியா, கர்ப்பப்பை சரிதல் போன்ற பிரச்னைகளைத் தடுக்க முடியும்.
* சிசேரியன் டெலிவரி எனில், சிசேரியனுக்கு 2 மாதத்துக்கு அப்புறம்தான் உடல் நார்மலுக்கு வரும். அதற்குப் பின் பயிற்சிகள் செய்யலாம்.