கருச்சிதைவை தடுப்பது எப்படி


பெண்கள் கர்பமாக இருக்கும் போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும். அதிலும் கர்ப்பத்தின் முதல் மூன்று மாதங்களில் தான் கர்ப்பிணிகள் அதிக கவனத்துடன் நடந்து கொள்ள வேண்டும். ஏனெனில் இந்நேரத்தில் கருச்சிதைவு எளிதில் ஏற்படும். மேலும் இன்றைய மன அழுத்தம் அதிகம் சூழ்ந்துள்ள மற்றும் ஆரோக்கிய மற்ற வாழ்க்கை முறையினால், நிறைய கருச்சிதைவானது நடைபெறுகிறது. அது மட்டுமின்றி, வாழ்க்கையை நன்கு நடத்துவதற்கு, கணவன், மனைவி இருவருமே
வேலைக்கு செல்ல வேண்டியுள்ளது. 

எனவே இத்தகைய சூழ்நிலையில் பெண்கள் ஒருசில செயல்களை மற்றும் உணவுகளை, கர்ப்பத்தின் முதல் மூன்று மாதங்களில் செய்வதை அறவே தவிர்க்கவேண்டும். இதனால் கருச்சிதைவு ஏற்படும் வாய்ப்புக்கள் குறையும். கருச்சிதைவு ஏற்படாமல் தடுக்க சில வழிமுறைகள் உள்ளன. அவற்றை பின்பற்றினால் கருச்சிதைவு ஏற்படுவதை தடுக்கலாம். 


  • சீஸ் உணவுகள் சாப்பிடுவதை அறவே தவிர்க்க வேண்டும். ஏனெனில் சீஸ் அதிகம் சாப்பிட்டால், அவை உடலில் ஒருவித அழற்சியை உண்டாக்கி, இறுதியில் கருச்சிதைவிற்கு வழிவகுக்கும்.   



  • பொதுவாக கர்ப்பத்தின்போது மிகவும் கவனமாக இருக்கவேண்டும். குறிப்பாக முதல் மூன்று மாதங்களில் நீண்ட தூர பயணம் மேற்கொள்வதை தவிர்க்க வேண்டும். ஏனெனில் இந்த நேரத்தில் வயிற்றில் இருக்கும் சிசுவானது நன்குவலிமையோடு இருக்காது. ஆகவே அப்போது உடலில் அதிகப்படியாக அசைந்தாலோ அல்லது குலுங்கினாலோ, அவை கருச்சிதைவை ஏற்படுத்தி விடும்.    



  • ஜங்க் உணவுகள் சாப்பிடக்கூடாது. அவையும் கருச்சிதைவை உண்டாக்கும். ஆகவே நல்ல பழங்கள் மற்றும் வீட்டில் சமைக்கும் ஆரோக்கியமான உணவுகளை மட்டும் சாப்பிட்டு வந்தால், உடலையும், வயிற்றில் இருக்கும் சிசுவையும் ஆரோக்கியத்துடன் பெற்றெடுக்கலாம்.   



  • சிலநேரங்களில் பெண்களுக்கு முதல் மூன்று மாதங்களில் கர்ப்பமாக இருப்பது தெரியாது. ஆகவே கர்ப்பமாவதற்கு முயற்சிக்கும் போது, காபி அதிகம் குடிப்பதை தவிர்க்க வேண்டும். ஏனென்றால், காபியில் உள்ள காப்ஃபைன் கருச்சிதைவை உண்டாக்கும். எனவே குழந்தையை நன்கு பெற்றெடுக்க வேண்டுமெனில் காபி குடிப்பதை நிறுத்த வேண்டும்.   



  • கர்ப்பமாக இருக்கும் போது அதிகமாக கோபமோ அல்லது மன அழுத்தமோ அடையக் கூடாது. ஏனெனில் அவ்வாறு மன அழுத்தத்தை உண்டாக்கும் ஹார்மோன்கள் கருப்பையில் ஒரு வித இறுக்கத்தை ஒருவாக்கி, கருவிற்கு அழிவை ஏற்படுத்தும். 


எனவே எந்த அளவு மன அழுத்தத்தை தவிர்த்து சந்தோஷமாக இருக்க முடியுமோ, அந்தளவு சந்தோஷமாக இருக்க வேண்டும். இவையே கர்ப்பத்தின் முதல் மூன்று மாதத்தில் ஏற்படும் கருச்சிதைவை தடுக்கும் எளிமையான வழிகள்.

பழைய பதிவுகளை தேட

[blogger]

MKRdezign

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget