இரட்டை வேடத்தில் ரஜினியின் கோச்சடையான்


ரஜினி தன்னுடைய இளைய மகள் சௌந்தர்யா இயக்கத்தில் நடித்து வரும் படம் ‘கோச்சடையான்’. இப்படம் 3டி தொழில்நுட்பத்தில் உருவாகி வருகிறது. தற்போது இறுதிக்கட்டப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இப்படம் குறித்து இயக்குனர் சௌந்தர்யா கூறும்போது, இப்படத்தில் ரஜினி இரண்டு வேடங்களில் நடிக்கிறார். நேர்மை  மற்றும் தெய்வீக குணம் கொண்ட தந்தை
கோச்சடையானாக ஒரு வேடத்திலும், ராணா என்ற மகன் வேடத்திலும் நடிக்கிறார். அப்பா வேடத்திற்கு ஷோபனாவும், மகன் வேடத்திற்கு தீபிகா படுகோனேவும் ஜோடியாக நடித்துள்ளனர். 

இவ்வாறு அவர் கூறினார். 

வரும் மே மாதம் 15-ந் தேதி முதல் 26-ந் தேதி வரை நடைபெறும் கேன்ஸ் திரைப்பட விழாவில் இப்படத்தின் டிரைலர் வெளியிடப்படுகிறது. இவ்விழாவில் ரஜினி கலந்து கொண்டு இந்த டிரைலரை வெளியிடுகிறார். 

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஒருவர் மனதில் காதல் இருப்பதை கண்டுபிடிப்பது எப்படி?

மொபைல் போன்களின் அனைத்து ரகசிய குறியிடு எண்கள்

பிளாகரில் வலைப்பதிவு புள்ளிவிவரம் விட்ஜெட்