சமீபகாலமாக இளவட்ட நடிகர்கள், தாங்கள் நடிக்கும் கதை, கதாபாத்திரத்தை ரசித்து நடிக்கிறார்களோ இல்லையோ, தங்களுடன் நடிக்கும் இளவட்ட நடிகைகளை ரொம்பவே ரசிக்கிறார்கள். அந்த பட்டியலில் பல நடிகர்கள் இருக்க, இப்போது புதிதாக சிவகார்த்திகேயனும் சேர்ந்துள்ளார். கேடி பில்லா கில்லாடி ரங்கா படத்தில் தனக்கு ஜோடியாக நடித்த ரெஜினாவின் நடிப்பை ஓவராக புகழ்ந்து கொண்டு திரிகிறார்.
நான் இதுவரை இரண்டு மூன்று நடிகைகளுடன் நடித்திருக்கிறேன். அவர்களில் ரெஜினா வித்தியாசமான நடிகையாக இருக்கிறார். காட்சிகளின் தன்மையை அறிந்து அழகாக அதற்கான உணர்ச்சிகளை வெளிப்படுத்துகிறார். குறிப்பாக, ரொமான்ஸ் காட்சிகளில் அவருடன் நடிக்கும்போது நம்மையுமறியாமல் அவரது நடிப்பு கவர்ந்து விடும். அதனால் அவருடன் நடித்தபோது நானும் ரொம்ப இயல்பாக நடித்தேன். நிஜக்காதலி போன்றே அப்போது என் கண்களுக்கு அவர் தெரிந்தார். இப்படி ரெஜினாவின் நடிப்பை வாயார புகழும சிவகார்த்திகேயனிடம், அவரது அழகுக்கு எத்தனை மார்க் போடுவீர்கள்? என்று கேள்வி கேட்டால், என்ன இது, மனதில் பட்டதை மறைககாமல் சொன்னால், இப்படி வம்பில் மாட்டி விடப்பார்க்கிறீர்கள் என்று ஜூட் விடுகிறார் சிவா.