ஜொலிக்கும் மகாராணி கரீனா கபூர்


நடிகர் சயீப் அலிகானை திருமணம் செய்து கொண்ட பின்னும், கரீனா கபூருக்கு, நடிப்பு ஆர்வம் குறையவில்லை. பாலிவுட்டில், தொடர்ந்து, பிசியாகவே வலம் வருகிறார். விளம்பரங்களிலும், அதிகம் தலைகாட்டுகிறார். தென் மாநிலங்களில் பிரபலமான, நகை கடை நிறுவனம், தன், விளம்பர மாடலாக, கரீனாவை ஒப்பந்தம் செய்துள்ளது. இந்த விளம்பரங்களில், கண்களை பறிக்கும் அளவுக்கு,
நகைகளை அணிந்து, ஜொலி ஜொலிக்கிறார், கரீனா. இந்த நிறுவனத்தின் போட்டி நிறுவனம், ஏற்கனவே, ஐஸ்வர்யா பச்சனை, ஒப்பந்தம் செய்துள்ளது. இதற்கு போட்டியாகத் தான், கரீனாவை களமிறக்கியுள்ளனர். ஐஸ்வர்யாவுக்கும், கரீனாவுக்கும் இடையே நடக்கும், தங்க வேட்டையில், யார் ஜெயிக்கப் போகிறார்கள் என்பதை, பொறுத்திருந்து பார்ப்போம். 

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஒருவர் மனதில் காதல் இருப்பதை கண்டுபிடிப்பது எப்படி?

மொபைல் போன்களின் அனைத்து ரகசிய குறியிடு எண்கள்

பிளாகரில் வலைப்பதிவு புள்ளிவிவரம் விட்ஜெட்