ஹாலிவுட் கணக்கு நாயகி கிறிஸ்டீன்


ராபர்ட் பேட்டின்சனின் காதலியாக இருந்து கொண்டே திருமணமான இயக்குனர் ரூபர்ட் சான்டர்ஸுடன் திருட்டுத்தனமாக உறவு வைத்துக் கொண்டார் கிறிஸ்டீன் ஸ்டீவர்ட். இதனை அவரே ஒப்புக் கொண்டதும், பேட்டின்சனின் ரசிகைகள் துரோகி கிறிஸ்டீன் என சபித்ததும், கழிவிரக்கத்தில் கிறிஸ்டீன் தன்னைத்தானே தண்டித்துக் கொண்டதும், தற்போது இருவரும் மீண்டும் காதலில் ஐக்கியமாகியிருப்பதும்... உலகுக்கே தெரிந்த விஷயங்கள்.


சமீபத்தில் கிறிஸ்டீனின் பிறந்தநாள் பார்ட்டியில் காதலர்கள் இருவரும் அந்நியோன்யமாக காணப்பட்டனர். அதற்கு ஆப்பு வைப்பது போல் ஒரு செய்தி.

ஸ்னோவொயிட் அண்ட் த ஹன்ட்ஸ்மேன் படத்தின் சீக்வெலில் கிறிஸ்டீன் நடிக்கிறார்.

அதில் என்ன பெரிய தவறு?

ஸ்னோவொயிட் அண்ட் த ஹன்ட்ஸ்மேன் படத்தில் நடித்த போதுதான் அப்படத்தின் இயக்குனர் ரூபர்ட் சான்டர்ஸுடன் கள்ள உறவு வைத்துக் கொண்டார் கிறிஸ்டீன். இப்போது அந்தப் படத்தின் சீக்வேலில் நடிக்கயிருக்கிறார்.

ஆனால் இந்த இரண்டாம் பாகத்தை சான்டர்ஸ் இயக்க மாட்டார் என்றொரு பேச்சு இருக்கிறது. எதற்கும் ராபர்ட் பேட்டின்சன் உஷாராக இருப்பது நலம்.

பழைய பதிவுகளை தேட