பவர் ஸ்டாரை பஞ்சர் ஆக்கிய டி.ராஜேந்தர்


டோப்பா வச்சவன் எல்லாம் ஹீரோவாக நடிக்கிறான், எனக்கு டாப்பா முடியிருக்கு நான் ஏன் ஹீரோவாக நடிக்கக் கூடாது என்று பவர் ஸ்டார் சீனிவாசனை சைடு கேப்பில் சீண்டியுள்ளார் நடிகரும், இயக்குநருமான டி.ராஜேந்தர். இங்கு காதல் கற்றுத்தரப்படும் என்ற படத்தின் கேசட் வெளியீட்டு விழா நேற்று சென்னை பிரசாத் ஸ்டூடியோவில் நடைபெற்றது. விழாவின் சிறப்பு அழைப்பாளராக வந்திருந்தார் டி.ராஜேந்தர். மேடையில் அவரை பேச அழைக்கும் போதே தொகுப்பாளி
கொஞ்சம் எச்சரிக்கையாக இருந்திருக்க வேண்டும். ஆனால் அவரோ, டண்டனக்கா, டணக்குனக்கா.... என்று கூறிவிட்டு உங்களுக்கே புரிந்திருக்கும் இப்போது யார் வரப்போகிறார் என்று கூறிவிட்டு சிரித்தார்

அவ்வளவுதான் சிலிர்த்துக்கொண்டு, தலைமுடியை கோதியவாரே வந்து பேச ஆரம்பித்தார் டி. ஆர். ''டண்டனக்கா டணக்குணக்கா என்று என்னை கிண்டல் பண்றியே... உன் அப்பன் செத்தாலும் டண்டனக் காதான். உன் அம்மா செத்தாலும் டண்டனக்காதான் என்று கூறினார். இதைக் கேட்ட உடன் தொகுப்பாளினி முகத்தில் ஈயாடவில்லை.

என் பெயரில் இருக்கிறது டி.... ஆனால் நான் குடிப்பதில்லை டீ. நான் படம் எடுப்பதை கிண்டல் செய்கிறார்கள். நான் சம்பாதிச்சது பலகோடி.. இப்ப எடுக்கிற படமெல்லாம் தெருகோடி.

ஹீரோவாக நான் நடிப்பதை கிண்டல் செய்கிறார்கள். டோப்பா முடி வச்சவனெல்லாம் முயற்சி பண்றான்; நான் டாப்பா முடி வச்சிருக்கிறேன்; நடிக்கக்கூடாதா'' என்று ஆவேசமாக கேட்டார்.

அதோடு நிற்காமல், நான் சும்மா... படைச்சவன் பிரம்மா, நேத்து வந்தவனெல்லாம் பட்டம் போட்டுக்கிறான். நான் என் பெயருக்குப் பின்னால் எம்.ஏ. பட்டத்தை தவிர வேறு எந்த பட்டத்தையும் போட்டுக்கொண்டதில்லை என்று சொல்லிவிட்டு பின்னர் வாயாலேயே இசையமைத்துவிட்டுதான் அமர்ந்தார். அதெல்லாம் சரிதான், பவர்ஸ்டார் சீனிவாசன் மேல அப்படி என்னதான் டி.ஆருக்கு கோபம் என்று கேட்டுக் கொண்டனர் விழாவிற்கு வந்திருந்தவர்கள்.

பழைய பதிவுகளை தேட