செக் நாட்டில் உள்ள அல்வில் சாப்ட்வேர் தனது புதிய பதிப்பான அவாஸ்ட் 8.0.1488.286யை கடந்த சில தினங்களுக்கு முன்னர் வெளியிட்டது. இது நச்சுநிரல் எதிர்ப்பு மென்பொருளைத் (Anti-virus software) தயாரித்து விநியோகிக்கின்றது. அவாஸ்ட் 64பிட் விண்டோஸ் இயங்குதளங்களுக்கு எனத் தயாரிக்கபட்ட நிகழ்நிலைப் பாதுகாப்பை அளிக்கும் வைரஸ் பாதுகாப்பு மென்பொருள் ஆகும். அவாஸ்ட் பல்வேறுபட்ட ஆபத்துக்களைகளில் இருந்து தடுப்பதற்காக
உருவாக்கப்படுகின்றது.
இது தொழில்நுட்பரீதியாக நச்சுநிரல், ஸ்பைவேர் என்கின்ற ஒற்று மென்பொருட்கள் போன்றவற்றிலிருந்து மாத்திரம் அல்லாது பல்வேறு பட்ட பிரச்சினைகளுக்கும் நச்சுநிரலில் இருந்து மீள்விக்கும் தகவற் தளத்தில் இருந்து பாதுகாக்கின்றது. இது முழுமையான சொற் மற்றும் ஒலிபெயர்புக்களைப் பதிவிறக்கம் செய்யவியலும். பணம் கொடுத்து வாங்கப்படும் சில ஆண்டிவைரஸ் மென்பொருட்களை விடவும் சிறப்பாக இயங்குகிறது இந்த இலவச மென்பொருள் நாளுக்கு நாள் இதன் பயனர்களை அதிகரித்துச் செல்வதற்கு இதுவே காராணம். அவாஸ்ட்டை தரவிறக்கி நிறுவியதும் மின்னஞ்சல் பெயர் தந்து ரெயிஸ்டர் செய்தால் ஒரு வருடத்திற்குரிய இலவச லைசென்ஸ் தருகிறார்கள்.
இதை அடிக்கடி அப்டேட் செய்தாலே போதும். வைரஸ் , மால்வேர் , ஸ்பைவேர், ரூட்கிட்கள் (virus, malware,spyware,rootkits) போன்ற அனைத்து வகையான நச்சுநிரல்களையும் கணினியில் நுழைய விடாமலும் பரவாமல் முற்றிலுமாக அழிக்கிறது. கணினிக்கு தேவையான அதிகபட்ச பாதுகாப்பை தருகிறது.
மற்றும் புதிய வசதியாக autosandbox வசதியைக்கூறலாம் இதன் மூலம் வைரஸ் பாதித்த(supsious) பைல்களை நம் கணினிக்கு எந்த இடையூறுமின்றி இயக்கலாம்.
ஒரு மென்பொருள் அல்லது பைலினால் என் கணினிக்கு பாதுகாப்பு கெடலாம் என நீங்கள் அறிந்திருந்தால் இதை நீங்கள் முயற்சி செய்யலாம். இது மேலும் மின்னஞ்சல் பாதுகாப்பு, நெட்வொர்க் பாதுகாப்பு (network), ஆன்லைன் பாதுகாப்பு போன்றவையும் தருகிறது.
இதில் Quick scan மற்றும் Full scan இதோடு boot time scan உள்ளது. யுஎஸ்பிகளையும் சிறப்பாக கவனிக்கிறது. வரைபடத்தோடு வைரஸ் பற்றிய புள்ளிவிவரங்களை தருகிறது.
Size:111.25MB |