ஆபாச செய்திகளை தடுக்க பேஸ்புக்கின் புதிய யுக்தி!


நினைத்த கருத்துக்களை உடனுக்குடன் பேஸ்புக்கில் போஸ்ட் செய்யும் வசதிகள் பற்றி அனைவருக்கும் தெரிந்த விஷயம். பிரபலங்களின் பேஸ்புக்கில் ரசிகர்கள் தினம் பலவிதமான கருத்துக்களை வெளியிடுகின்றனர். இதில் சில தவறான கருத்துக்களும் வெளியாகின்றன. இதனால் பிரபலங்களின் பெயர் பாதிக்கப்படும் அளவிற்கு சில சம்பவங்களும் நிகழ்கின்றன.

இதை தடுக்கும் வகையில் பிரபலங்களின் பேஸ்புக் அக்கவுண்டில் கருத்துக்களை பதிவு செய்பவர்களின் விபரங்களை பெறும் வகையில், புதிய நடவடிக்கையை பேஸ்புக் துவங்கியுள்ளது. இதன் மூலம், போலி அக்கவுண்ட் வைத்துக்கொண்டு பிரபலங்களின் அக்கவுண்ட்டில் சர்ச்சைக்குரிய கருத்துக்கள் பதிவு செய்வதை தடுக்க முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்காக, பிரபலங்களின் பேஸ்புக்கில் கருத்துக்களை எழுத வேண்டும் என்றால், அரசாங்கத்தால் வழங்கப்பட்ட புகைப்படத்துடன் கூடிய அடையாளச் சான்று, பாஸ்போர்ட் விவரங்கள், லைப்ரரி கார்டு, க்ரெடிட் கார்டு, பர்த் சர்டிஃபிகேட் போன்ற விவரங்களை அதற்காக பேஸ்புக் வழங்கும் விண்ணப்பத்தில் நிரப்ப வேண்டும்.
நிறைய சர்ச்சைக்குரிய கருத்துக்களை சில ரசிகர்கள் வெளியிடுவதை தவிர்க்கத் தான் இந்த அதிரடி சோதனையை பேஸ்புக் துவங்கியுள்ளது. இதை பூர்த்தி செய்யாமல் பிரபலங்களின் பேஸ்புக் பக்கத்தில் கருத்துக்களை வெளியிடவும் முடியாத வகையில் இந்த வசதிகள் உருவாக்கப்பட்டுள்ளது. இதனால் தவறான கருத்துக்களை பதிவு செய்தவர்கள் பற்றிய விவரங்களை எளிதாக தெரிந்து கொள்ளவே இந்த வசதி கொடுக்கப்பட்டுள்ளது.
இந்த வசதியின் மூலம் அடுத்தவர்களின் பெயரில் போலியாக உருவாக்கப்படும் ப்ரோஃபைல்களையும் தவிர்க்கலாம். எந்த துறையில் இருக்கும் பிரபலங்களானாலும் சர்ச்சைகுரிய கருத்துக்களை பற்றி கவலையில்லாமல் இனி பேஸ்புக்கில் சுதந்திரமாக ஜொலிக்கலாம்.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஒருவர் மனதில் காதல் இருப்பதை கண்டுபிடிப்பது எப்படி?

மொபைல் போன்களின் அனைத்து ரகசிய குறியிடு எண்கள்

பிளாகரில் வலைப்பதிவு புள்ளிவிவரம் விட்ஜெட்