கஞ்சா கருப்பும் கவரி மான் நடிப்பும்


தமிழ் சினிமாவில் கருணாஸுக்கும். கஞ்சா கருப்புக்கும்தான் ஹீரோயின்கள் கிடைப்பது கடும் சிரமமாக இருக்கிறது. ‘சந்தமாமா’ படத்துக்கு கருணாஸ் நாயகி தேடி அலைந்தது போல், கஞ்சா கருப்பு தயாரித்து நடிக்கும் படம் ‘வேல்முருகன் போர்வெல்ஸ்’ படத்துக்கும் இந்த நிலை ஏற்பட்டது. அவருக்கு ஜோடியாக நடிப்பவருக்கு, சம்பளமும் குறைவாக கொடுத்தால் போதும் என நினைத்து, பல புது முகங்களை தேடினார். ஒருவரும் நடிக்க ஒப்புக் கொள்ளவில்லை. 


இறுதியாக நடிகை பிந்து மாதவி, தான் கேட்கும் சம்பளம் தருவதாக இருந்தால் நடிக்கிறேன். அதற்கு முன் ஸ்கிரிப்டை படித்துப் பார்க்க வேண்டும். கதையில் என் கேரக்டருக்கு முக்கியத்துவம் இருந்தால் மட்டுமே ஒப்புக் கொள்வேன் என போட்ட கண்டிஷனுக்கெல்லாம் கருப்பு சரி சொன்ன பிறகும், கதை பிடி‌த்த ‌பிறகு‌ம்தா‌ன் நடிக்க சம்மதித்திருக்கிறார்.

பழைய பதிவுகளை தேட