BitDefender Free Edition - நச்சு நிரல் எதிர்ப்பு மென்பொருள் 1.0


விண்டோஸ் கணினியின் பாதுகாப்பு பற்றி அக்கறை உள்ளவர்கள் அதிகம் கவலைப்படுவது தங்களது ஆண்டிவைரஸ் மென்பொருளால் தற்போது உருவாகி வரும் அனைத்து வைரஸ்களையும் கண்டறியும் திறமையுள்ளதா என்பதை பற்றிதான். சில நேரங்களில் கணினியிலுள்ள ஆண்டிவைரஸ் மென்பொருளையும் மீறி வைரஸ் தாக்குதல் நடைபெறுகிறது. இது போன்ற சந்தர்ப்பங்களில் பல பிரபலமான ஆண்டிவைரஸ் மென்பொருட்களை கணினியில் நிறுவி
ஸ்கான் செய்யுமாறு பரிந்துரைக்கிறார்கள். எனினும் ஒரே நேரத்தில் இரு ஆண்டிவைரஸ் மென்பொருட்களை நிறுவ முடியாது.

பிரபலமான சில ஆண்டிவைரஸ் மென்பொருட்களின் ஸ்கானிங்க் இணைப்புக்களை தொடர்ச்சியாக இங்கே பார்க்கலாம். BitDefender Free Edition 1.0 எனும் பிரபலமான ஆண்டிவைரஸ் மென்பொருளின் இலவச ஸ்கானிங்க் இணைப்பு இதுவாகும். இங்கே சென்று Start Scanner என்பதை கிளிக் செய்தால் திறக்கும் விண்டோவில் நீங்கள் பயன்படுத்தும் உலாவி பயர்பாக்ஸ் ஆயின் அதற்குரிய ஆட் ஒன் ஐ நிறுவ வேண்டும். அதிலே Quick Scan என்பதை அழுத்தி கணினியை வேகமாக ஸ்கான் செய்து கொள்ளமுடியும்.

இயங்குதளம்: விண்டோஸ் எக்ஸ்பி / 2003 / விஸ்டா / 2008/7/ 8

Size:158.4KB
பிரிவுகள்:

பழைய பதிவுகளை தேட

[blogger]

MKRdezign

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget