
சுக பிரசவம் என்பது அரிதாகி விட்ட காலம் இது. நல்ல நாள், நல்ல நேரம் பார்த்து சிசேரியன் மூலமாக குழந்தை பிறக்க வைக்கின்றனர். சிசேரியன் மூலம் குழந்தை பெற்றுகொள்வது, இப்போது இருமடங்கு அதிகரித்து உள்ளது. சுகப்பிரசவமானால் தாய் இயல்பாக பிரசவ வலியை அனுபவிக்க நேரிடும், பிள்ளை பேறுக்கு பிறகு உடம்பு குண்டாகிவிடும், கணவருக்கு தாம்பத்தியத்தில் ஈடுபாடு குறையலாம்'
என்பதே, இதற்கு முக்கிய காரணம். பிரசவவலி என்பது அதிகபட்சம் 12 மணிநேரம் தான், அதனை பொறுத்துகொண்டால் ஆண்டுமுழுவதும் மகிழ்ச்சியுடன் நடமாடலாம்.
உடம்பிலும் ஆரோக்கியம் நிலைக்கும். ஆனால் சிசேரியன் பிரசவத்தில் தாய்க்கு அறுவை சிகிச்சை காரணமாக, வயிற்றில் ஒரு கோடு மாதிரி தெரியும், இதுதவிர `ஓராண்டுக்கு கடின வேலைகள் பார்க்கக்கூடாது' மாதிரியான நிபந்தனைகளுக்கும் உள்ளாக வேண்டியிருக்கும்.
சிசேரியன் செய்தவர்கள் உடற்பயிற்சி செய்யக்கூடாது என்று எச்சரிப்பார்கள். தையல் பிரிந்து விடும். சிக்கலாகிவிடும் என்று எத்தனையோ பயமுறுத்தல்கள் இருக்கும். சிசேரியன் செய்வதற்காக தண்டுவடப்பகுதியில் போடப்படும் ஊசியினால் காலம் முழுக்க முதுகுவலியால் அவதிப்பட நேரிடும் என்று பயமுறுத்துவார்கள்.