பிரசவிக்க முடியாமல் இருப்பதற்கான காரணங்கள் - உங்களுக்கு தெரியுமா


பல பேருக்கு இரண்டாம் முறையாக கருத்தரிக்க முடியாமல் இருப்பதற்கான காரணங்கள் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அதிலும் இரண்டாவது குழந்தைக்கு முயற்சிக்கும் போது தான், யோசிக்கவே ஆரம்பிப்பார்கள். அவ்வாறு இண்டாம் குழந்தைக்கு முயற்சிக்கும் போது, கருத்தரிக்க முடியவில்லை யெனில், அதற்கு காரணம் மலட்டுத்தன்மை தான். ஏனெனில் முதன்முறையாக கருத்தரித்தப் பின்னர்,
இரண்டாவது குழந்தைக்கு முயற்சிக்கும் போது, நிச்சயம் எளிதில் கருத்தரிக்க முடியும் என்று சொல்ல முடியாது. ஏனென்றால் முதல் குழந்தைக்கு பின்னர் கூட மலட்டுத் தன்மை ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளது. இருப்பினும், இதில் ஒரு நல்ல செய்தி என்னவெனில், இந்த பிரச்சனையை பெரும்பாலும் எளிதில் குணப்படுத்திவிடலாம். எப்படியெனில் ஏற்கனவே குழந்தை பிறந்திருப்பதால், இரண்டாவ்து குழந்தைக்கு முயற்சிக்கும் போது ஏற்படும் பிரச்சனையானது அவ்வளவு கஷ்டமானதாக இருக்காது. குறிப்பாக இந்த பிரச்சனை பெண்களுக்கு மட்டும் ஏற்படுவதில்லை. ஆண்களுக்கும் தான் இத்தகைய பிரச்சனை ஏற்படும். இப்போது இந்த பிரச்சனை ஏற்படுவதற்கான காரணங்கள் என்னவென்று குறிப்பிட்டுள்ளோம். அதைப் படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

தற்போதுள்ள காலத்தில் 40 வயது ஆன பெண்கள் எளிதில் கருத்தரிக்கின்றனர். ஆனால் உண்மையில் 30 வயதானாலே, கருத்தரிக்கும் தன்மையானது குறைய ஆரம்பிக்கும். இதற்கு காரணம் ஹார்மோன்களின் செயல்பாடுகள் தான். எப்படியெனில் ஒருவர் முதல் குழந்தைக்கு 30-35 வயதில் கருத்தரித்தாலே, அது ஒரு அதிர்ஷ்டம் தான். அதற்கு பின்னர் இரண்டாவது குழந்தைக்கு முயற்சிக்கும் போது, கருத்தரிக்கும் தன்மையானது முற்றிலும் குறைந்துவிடும். எனவே தான், கருத்தரிக்க முடிவதில்லை. மேலும் 35 வயதிற்கு மேல், இறுதி மாதவிடாய் நெருங்குவதால், கருத்தரிக்க முடியாமல் போகும்.

சில சமயங்களில், அறுவை சிகிச்சை அல்லது முதல் பிரசவத்தில் சிசேரியன் என்றால், அப்போது ஏற்படும் தழும்புகளை ஏற்படுத்தும் திசுக்கள் கருப்பையைச் சுற்றிலும் இருக்கும். இதனாலும் தடை படலாம். எனவே இதனை மருத்துவரிடம் கேட்டு தீர்வு காண்பது நல்லது. பொதுவாக இந்த பிரச்சனை நூறில் இரண்டு பேருக்கு தான் வரும்.

ஒருவேளை 20 வயதில் பாலி-சிஸ்டிக் அண்டகங்கள் இல்லாவிட்டால், 30 வயதிற்கு மேல் வராது என்பதில்லை. பொதுவாக மலட்டுத்தன்மை பிரச்சனைக்கு பாலி-சிஸ்டிக் அண்டகம் தான் காரணமாக இருக்கும். அதிலும் வயதாக வயதாகத் தான் இந்த பிரச்சனை மிகவும் கொடியதாக மாறும்.

நார்த்திசுக் கட்டிகள், சில சமயங்களில் பெரியதாக வளர்ந்து, கருப்பையில் அடைப்பை ஏற்படுத்தி, கருவுறுதலுக்கு இடையூறாக இருக்கும். இத்தகைய பிரச்சனை பொதுவாக 30 வயதிற்கு மேல் ஏற்படுவது தான் அதிகம். இத்தகைய பிரச்சனையை மருந்துகள் மற்றும் சரியான சிகிச்சை மூலம் சரிசெய்யலாம்.

வயது அதிகமானால், விந்தணுவின் உற்பத்தி குறைவாக இருக்கும். பொதுவாக இந்த பிரச்சனை 40 வயதிற்கு மேற்பட்ட ஆண்களுக்கு தான் ஏற்படும். ஆனால் தற்போது, அதிகப்படியான மன அழுத்தத்தால், விரைவிலேயே இந்த பிரச்சனை வந்துவிடுகிறது.

சாதாரணமாகவே புகைப்பிடித்தல், ஆண், பெண் இருவருக்குமே மலட்டுத்தன்மையை ஏற்படுத்தும். ஆண்களுக்கென்றால், விந்திணுவின் உற்பத்தி குறைந்துவிடும். பெண்களுக்கென்றால், கருப்பையில் தங்கும் கருவிற்கு பாதிப்பை ஏற்படுத்தி, கருவை தங்க விடாமல் செய்யும். ஆகவே இந்த செயலும் இரண்டாவது கருவுறுதலுக்கு தடையாக இருக்கலாம்.

முதல் கர்ப்பத்தின் போது ஏதேனும் பிரச்சனை இருந்தால், அது நாளடைவில் இரண்டாம் குழந்தைக்கு முயற்சிக்கும் போது தடையாக இருக்கும். உதாரணமாக, கருப்பையில் ஏதேனும் தொற்றுகள் இருந்து, அதனால் கருப்பையில் காயங்கள் ஏற்பட்டால், அது இரண்டாம் குழந்தைக்கு முயற்சிக்கும் போது இடையூறை விளைவிக்கும்.

முதல் பிரசவத்தின் போது, குழந்தை இடம் மாறி இருந்து பிறந்தால், அது இரண்டாம் குழந்தைக்கு முயற்சிக்கும் போது தடையை ஏற்படுத்தும். ஏனெனில் இந்த மாதிரியான பிரசவத்தின் போது, அண்டக்குழாய்கள் அதிகம் பாதிக்கப்பட்டிருப்பதோடு, தழும்புகளை உண்டாக்கும் திசுக்கவும் சுற்றி இருக்கும்.

தற்போது பெரும்பாலான பெண்கள் தைராய்டு பிரச்சனையால் அதிகம் அவஸ்தைப்படுகின்றனர். இவ்வாறு தைராய்டு சுரப்பியானது சரியாக தைராய்டு ஹார்மோன்களை சுரக்காவிட்டால், அது மாதவிடாய் சுழற்சியை பாதிப்பதால், கருவுறுதலில் பிரச்சனை ஏற்படுகிறது.

வயதானால் நீரிழிவு நோயும், அழைக்காமல் எப்படியாவது சிலருக்கு வந்துவிடும். இவ்வாறு முதல் பிரசவத்திற்கு பின் நீரிழிவு வந்தால், அது மீண்டும் கருவுறுதலில் தடையை ஏற்படுத்தும்.

பழைய பதிவுகளை தேட

[blogger]

MKRdezign

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget