குரு பகவானை வழிபாடு செய்வது எப்படி?

குரு பகவான் நவக்கிரகங்களில் ஐந்தாவது இடத்தை பெறுகிறார். இவர் மிகவும் சுபத்தன்மை வாய்ந்தவர். இவர் பார்க்கும் இடமெல்லாம் விருத்தியாகும் என்று ஜோதிடர்கள் கூறுகிறார்கள். கிரகங்களிலேயே மிகவும் தூரத்தில் பெரிய கிரகமாக வீற்றிருக்கிறார். ஒரு ராசியை கடக்க ஓராண்டு எடுத்துக்கொள்ளும் குரு பகவான் பன்னிரெண்டு ராசிகளையும் கடக்க பன்னிரெண்டு வருடங்கள் ஆகின்றன.

குரு சிம்ம ராசியிலும், சூரியன் கும்ப ராசியிலும் உலவும் போது சந்திரன் மக நட்சத்திரத்தில் வந்து குருவை தொட்டுவிட்டால் அன்று தான் மகாமகம். இது மருவி மாமாங்கமாகி விட்டது. இது பன்னிரெண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை தான் வரும். வடநாட்டில் கும்பமேளா என்று நடப்பது போல தமிழ்நாட்டில் மகாமக விழா நடத்தப்படுகிறது.

கும்பகோணத்தில் மகாமக குளம் என்று ஒரு குளம் உண்டு. வெளி மாநிலங்களில் இருந்தும் லட்சக்கணக்கான மக்கள் இங்கு வந்து செல்கிறார்கள். மகாமக குளத்தில் நீராடி சென்றால் பாவங்கள் விலகும் என்று ஒரு ஐதீகம். குரு பகவான் ஆங்கிரஸ முனிவருக்கும், சிரத்தா தேவிக்கும் பிறந்தவர். இவருக்கு தாரை என்ற மனைவி உண்டு.

ஒரு சகோதரரும், ஒரு சகோதரியும் பெற்ற குருவிற்கு பரத்வாஜர் என்ற மகனும் இருந்தார். குருவைப்பற்றி புராணத்தில் பல கதைகள் உள்ளன. காசிக்கு சென்று ஒரு சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்து பதினாறாயிரம் ஆண்டுகள் சிவபெருமானை நோக்கி குரு தவம் செய்தார். இவர் தவத்தை மெச்சிய சிவபெருமான் கிரக மண்டலத்தில் இவருக்கு இடம் கொடுத்ததாக வரலாறு.

குருவிற்கு பிரஹஸ்பதி என்றும், வியாழன் என்றும், மந்திரி என்றும், அரசன் என்றும் பல பெயர்கள் உண்டு. குரு பகவான் தமிழகத்தில் திருச்செந்தூர், பாடி, தென்குடி திட்டை ஆகிய மூன்று தலங்களுக்கு சென்று ஈஸ்வரனை பூஜித்து பேறு பெற்றதாக கூறப்படுகிறது. ஒன்று தென் குடித்திட்டை என்ற தலம். இது மாயவரத்திற்கும், தஞ்சைக்கும் இடையில் உள்ளது.

ரெயில் நிலையத்தின் பெயரும் திட்டை தான். திருஞான சம்பந்தர் இங்கே சென்று தல மூர்த்தியான பசுபதி நாதரையும் உலக நாயகியையும் பாடி பேறு பெற்றிருக்கிறார். இரண்டாவது தலம் திருவலிதாயம் என்பது.

சென்னையில் இருக்கும் இத்தலத்திற்கு பாடி என்ற மற்றொரு பெயரும் உண்டு. திருஞான சம்பந்த பெருமான் இங்கே எழுந்தருளி இருக்கும் வலிதாயநாதரையும், தாயம்மையையும் பாடி பரவசம் அடைந்திருக்கிறார். குரு பகவான் இந்த தலத்திற்கு வந்து தல மூர்த்தியை வணங்கி பூஜித்து பெருமை பெற்றதாக வரலாறு.

பழைய பதிவுகளை தேட

[blogger]

MKRdezign

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget