ஹாலிவுட் பாக்ஸ் ஆபிஸ் நிலவரம்

வசூல்னா இதுதான் வசூல். வட அமெரிக்காவில் மட்டும் அயன் மேன் 3 சென்ற வார இறுதிவரை 1500 கோடிகளுக்கு மேல் வசூலித்து சாதனைப் படைத்திருக்கிறது.

அமெரிக்காவில் வெளியாவதற்கு ஒரு வாரத்துக்கு முன்பே 42 நாடுகளில் அயன் மேன் 3 வெளியானது. முதல் மூன்று தினங்களில் ஏறக்குறைய ஆயிரம் கோடிகளை வசூல் தொட்டது.
அமெரிக்காவிலும் அதே வசூல் மழை. இந்த வார யுஎஸ் பாக்ஸ் ஆபிஸில் வார இறுதியில் 35.8 மில்லியன் டாலர்களுடன் இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது. 3 வாரங்களில் இதன் யுஎஸ் வசூல் மட்டும் ஏறக்குறைய 338 மில்லியன் அமெரிக்க டாலர்கள்.

முதலிடத்தில் சென்ற வாரம் வெளியான ஸ்டார் ட்ரெக் இன் டூ டார்க்னெஸ் உள்ளது. வார இறுதியில் இதன் வசூல் - வியாழன் ப்ரிமியரும் சேர்த்து 83.7 மில்லியன் டாலர்கள்.

மூன்றாவது இடத்தில் அமிதாப்பச்சன் கௌரவ வேடத்தில் நடித்த டிகாப்ரியோவின் த கிரேட் கேட்ஸ்பை. இரண்டாவது வார இறுதியில் 23.9 மில்லியன் டாலர்களை வசூலித்துள்ள. இரண்டு வாரங்களின் மொத்த வசூல் 90.7 மில்லியன் டாலர்கள்.

நான்காவது இடத்தில் பெயின் அண்ட் கெய்ன். சென்ற வார இறுதியில் 3.2 மில்லியன் டாலர்களை வசூலித்துள்ளது. நான்கு வாரங்களில் வசூல், 46.7 மில்லியன் டாலர்கள்.

ஐந்தாவது இடத்தில் அனிமேஷன் படமான த க்ரூட்ஸ். ஒன்பதாவது வார இறுதியில் 3.02 மில்லியன் டாலர்களை வசூலித்துள்ளது. ஒன்பது வார மொத்த யுஎஸ் வசூல் 177 மில்லியன் டாலர்கள்.

பழைய பதிவுகளை தேட

[blogger]

MKRdezign

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget