குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்கும் மகளிர் அறிந்து கொள்ள வேண்டியவை


* தாய் அதிகமாக எடைபோட்டு பருமனாகக்  கூடாது. 

* தாய்ப்பால் கொடுப்பவர்கள் மார்பகத்திற்கு நன்கு பொருந்தும் உள்ளாடைகளை அணிய வேண்டும். 

* மருத்துவரின் ஆலோசனையின்றி மருந்துகள், உட்கொள்ளக்கூடாது. ஏனெனில் சில மருந்துகள் தாய்ப்பால் வழியாக குழந்தைக்குச் சேரும். 

* குழந்தை பிறந்தவுடன் தாய்ப்பால் கொடுப்பது சிறப்பு, ஏனெனில் தாய்ப்பாலில் குழந்தையின் கண் பார்வைக்குத் தேவையான வைட்டமின் "ஏ' சத்துகள் அதிகமாக இருக்கின்றன.   

* முதல் சிலநாட்களில் குழந்தையின் பசிக்கேற்ப கால நேரமின்றி பால்கொடுக்க வேண்டும். 

* சரியாக பால் குடிக்கும் குழந்தைகள், 80 முதல் 90 சதவீத பாலை ஒவ்வொரு மார்பகத்திலிருந்தும் முதல் நான்கு நிமிடங்களில் குடித்துவிடும்.  

* குழந்தை, மார்பகத்தில் பால் குடிக்கக் குடிக்கத்தான் அதிகம் பால் சுரக்கும். 

* ஒரு நாளைக்கு 8 முதல் 10 முறை அல்லது குழந்தையின் தேவைக்கேற்ப தாய்ப்பால் கொடுக்கலாம். 

* முதல் மாதத்தில் குழந்தை 2, 3 மணி நேரத்திற்கு ஒரு முறை பால் குடிக்கும். அதன்பின்பு 4 மணி நேரத்திற்கு ஒரு முறை தாய்ப்பால் குடிக்கும். 

* குழந்தைக்கு பால் கொடுத்தவுடன் குழந்தையைத் தோள்மீது போட்டு முதுகைத் தடவிக்கொடுத்தால், குழந்தைக்கு ஏப்பம் வந்துவிடும்.

பழைய பதிவுகளை தேட

[blogger]

MKRdezign

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget