
சித்தார்த் - சமந்தா காதல் விவகாரம், ஆந்திராவில் பற்றி எரிந்து கொண்டிருக்கிறது. எந்த மீடியாக்களில், அவர்கள் தலைகாட்டினாலும், காதல் பற்றிதான் கேட்கின்றனராம். இதனால், மீடியா பேட்டிகளையே, அவர்கள் இருவரும் தவிர்த்து வருகின்றனர். சித்தார்த்தை விட, சமந்தா தான், இந்த காதல் செய்தியால் அதிக தலைவலிக்கு ஆளாகியுள்ளார். காரணம், சித்தார்த்துடன், தான் பழகிய விஷயங்களை, தன் தோழிகளிடம் அவ்வப்போது
உளறி கொட்டி வந்தார் சமந்தா.அவர்கள் தான், இதுபற்றி தங்களது தோழிகளிடம் கூற, அப்படியே பரவி, விஷயம் மீடியாக்கள் வரை சென்று விட்டதாம். இதனால், தோழிகள் மீது, பயங்கர ஆத்திரத்தில் இருக்கும் சமந்தா, இப்போது அத்தனை தோழிகளையும், "கட் செய்து விட்டதோடு, தன் புதிய மொபைல் போன் நம்பரையும் ரகசியமாக வைத்துள்ளார்.