வித்யா பாலனின் அதீத நம்பிகை

தி தர்ட்டி பிக்சர், கஹானி போன்ற வித்தியாசமான கதையம்சம் உடைய படங்களில் நடித்த, வித்யா பாலன், ஆன்மிகத்தில் அதிக ஈடுபாடு கொண்டவர். குறிப்பாக, தினமும் வீட்டை விட்டு வெளியே புறப்படும்போது, எதிரில், யாராவது வருகிறார்களா, என்பதை கவனித்தப் பிறகே வெளியேறுவார். அப்படிப்பட்ட வித்யா பாலன், சமீபத்தில் தன் கணவர் சித்தார்த்துடன், "ஆஷிகி என்றொரு படத்தின்
சிறப்புக் காட்சியை பார்க்க சென்ற போது, ஒரு பூனை, தியேட்டர் வாசலில், அவருக்கு குறுக்கே பாய்ந்து விட்டதாம்.இதனால் அலறிய அவர், "சகுனம் சரியில்லை என, கூறி, வீட்டுக்கு திரும்ப முடிவு செய்தார். கணவர், சமாதானப்படுத்தியதால், ஒரு வழியாக, தியேட்டருக்கு சென்றார். இருப்பினும், "யாரிடமாவது வாய் கொடுத்தால், அது வம்பில் முடியக்கூடும் என, நினைத்து, படம் முடிந்து, வீட்டிற்கு வந்து சேரும் வரை, யாரிடமும், வாய் திறக்கவே இல்லையாம்.

பழைய பதிவுகளை தேட