பெண்களுக்கு தேவையான சத்து வகைகள்


30 வயதைத் தொட்டவர்கள் வைட்டமின் டி- கால்சியம் செறிந்த உணவுகளை கட்டாயம் எடுத்துக்கொள்ள வேண்டும். மாதவிடாய் முற்றுபெறும் நிலையில் உள்ள பெண்கள் கால்சியம், அதிகம் உள்ள சிக்கன், மட்டன், இறால், முட்டை, மீன் போன்ற உணவுகளை சேர்க்க வேண்டும். மெனோபசுக்குப் பின்னர் சோயாபீன்ஸ் சேர்த்துக கொண்டால் அதிக கால்சியம் உடலுக்கு கிடைக்கும். பெண்களை பொருத்தவரை மாதவிலக்கு காலத்தில் அதிக ரத்தம்
வெளியேறுவதால் மூட்டுப் பிரச்சனைகள் வரலாம். எலும்பின் வளர்ச்சி உறுதிப்பாட்டுக்கு சிறுவயது முதலே கால்சியம் சக்தி நிறைந்த உணவுகளை அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டும். 

பெண்கள் சிறு வயது முதலே காய்கறிகளையும், பழ வகைகளையும் அதிகளவில் சேர்த்துக் கொண்டால் தான் 30 வயதை தொடும் போது ஏற்படும் பல விதமான பிரச்சனைகளை சமாளிக்க முடியும். சிறிய வயதில் நாம் சேர்த்துக்கொள்ளும் உணவுகள் தான் வயதாகும் போது உடலுக்கு சக்தியை கொடுக்கும். 

பசுப்பாலும் பால் சார்ந்த உணவுகளும் எலும்பு வளர்ச்சிக்கு உதவும் முக்கிய காரணியாகும். தினமும் ஒரு பழம் சாப்பிடுவது அவசியம். கீரை வகைகள், பேரீச்சை, பால் மற்றும் பால் பொருட்கள், உலர் பழங்கள், கொட்டை வகைகள், மீன் சாப்பிடுவதன் மூலம் மூட்டு பிரச்சனைகளை தடுக்க முடியும்.

பழைய பதிவுகளை தேட

[blogger]

MKRdezign

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget