அதிர வைக்கும் அமலாபால்

கோலிவுட்டில் சம்பாதித்த திறமையான நடிகை பட்டத்தின் மூலம் டோலிவுட்டில் ஒரு ரவுண்ட் வரலாம் என்ற கனவில் இருந்த மைனா புகழ் அமலாபால் தற்போது குழப்பத்தில் உள்ளாராம். தனக்கு முன்னாலும், பின்னாலும் அறிமுகமான சமந்தா, தமன்னா, அஞ்சலி, ஸ்ருதி என பலரின் வருகையால் உண்டான கடும் போட்டியால் அமலாபாலின் நிலைமை மிக மோசமாகி விட்டதாம்.

மற்ற நடிகைகளின் ‘தாராள' மனப்பாங்கால், அமலாவின் மார்க்கெட் தகிடுதத்தாம் ஆகிறதாம். இதனால், செம கடுப்பில் இருக்கிறார் அமலா பால்.

முன்னணி ஹீரோக்களுடன் 'சுந்தர தெலுங்கில்' எப்படியாவது டூயட் பாடிவிட வேண்டும் என கடுமையான முயற்சியில் உள்ளார் அமலாபால்.

அல்லு அர்ஜுனுடன் அமலாபால் நடித்த "இட்டராமய்யிலதோ" படம் சமீபத்தில் வெளியானது. அப்படத்திற்கு ரசிகர்களின் ஆதரவு எவ்வாறு உள்ளது என்பதை பொறுத்திருந்து பார்த்து அதற்கேற்றபடி சம்பளத்தை உயர்த்த திட்டமிட்டுள்ளாராம் அமலாபால்.

அப்படி நல்ல ரிசல்ட் கிடைத்தால் தொடர்ந்து புதிய படங்களில் நடிக்கலாம் அல்லது மூட்டையை கட்டி விடலாம் என மனக் கணக்கில் இருக்கிறாராம் இந்த மைனா.

ஆனால், எதிர்பாரா விதமாக அந்த படத்துக்கு ஒரு பக்கம் பாராட்டும், மற்றொரு பக்கம் படம் சரியாக போகவில்லை என விமர்சனமும் எழுந்துள்ளதால் என்ன செய்வது என்ற பெருங்குழப்பத்தில் தவித்து வருகிறாராம் அமலாபால்.

பழைய பதிவுகளை தேட