
கணினியில் இயங்குதளம் நிறுவி நாட்கள் ஆகிவிட்டது அதனால் தான் இயங்குதளம் மந்தமாக செயல்படுகிறது எனவே மீண்டும் இயங்குதளம் நிறுவ வேண்டும் என்று சில கணினி வல்லுனர்கள் கூறுவார்கள் அது மிகவும் தவறான விஷயம். கணினி அவ்வாறு மந்தமாக செயல்படும் போது கணினியில் இருக்கும் தேவையற்ற ரிஸிஸ்டரி பைல்கள், ஜங் பைல்களை நீக்குவதன் மூலம் கணினியின் வேகத்தை அதிகரிக்க முடியும். மேலும் வன்தட்டினை டிபிராக்மெண்டேஷன் செய்வதன்
மூலமாகவும் கணினியின் வேகத்தை கூட்ட முடியும்.
கணினியில் தேவையில்லாமல் நிறுவியிருக்கும் மென்பொருள்களை நீக்கம் செய்வதன் மூலம் கணினி வேகத்தை மேலும் அதிகரிக்க முடியும். கணினியில் இருக்கும் தேவையற்ற பைல்களை சிறப்பாக நீக்கம் செய்யவும், ரிஸிஸ்டரியை மேலும் சீர் செய்யவும். Baidu PC Faster என்ற மென்பொருள் உதவி செய்கிறது.
இயங்குதளம்: விண்டோஸ் XP / விஸ்டா / 7 / 8
![]() |
Size:37.26MB |