மகளிரை வதைக்கும் வாய் புற்றுநோய்

மனித உடலானது பல வகையான செல்களால் உருவாக்கப்பட்டது. உடலில் உள்ள செல்கள் இயல்பாகவே வளர்ந்து பிரிந்து மேலும் உடலுக்கு தேவையான பல செல்களை உருவாக்குகின்றது.  சில வேலைகளில், உடலுக்கு தேவையற்ற பல புதிய செல்கள் தோன்றி உடலில் உள்ள பழைய வயதடைந்த செல்கள் இறக்க வேண்டிய நேரத்தில் இறந்து வெளி ஏறாமல் உடலிலேயே மிகைப்படுத்தப்பட்டு கட்டுப்பாடற்ற செல்கள் பிரிந்து பெருகுவதால் புற்றுநோய் ஏற்படுகின்றது. 


கட்டுப்பாடற்று கிடக்கும் இந்த செல்களானது, நாளடைவில் மற்ற தசைகளையும் தாக்குகின்றன். பெண்களே புற்றுநோயினால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். இதில் பெண்களுக்கான மார்பகப் புற்றுநோய் மற்றும் கர்ப்பப்பை வாய் புற்றுநோய் முதன்மை நிலையை வகிக்கின்றது. 

மார்பக புற்றுநோய் பற்றின விழிப்புணர்வு பெண்களிடையே ஓரளவு காணப்பட்டாலும் கர்ப்பப்பை வாய் புற்றுநோய் பற்றின விழிப்புணர்வும், அதனை தடுக்க கையாளும் முறைகளும், விளக்கங்களும் குறையவே காணப்படுகின்றது. பெண்களின் இரண்டாம் உயிர்கொல்லி இந்த கர்ப்பப்பை வாய் புற்றுநோய். 

ஆண்டிற்க்கு சுமார் 500 000 பெண்கள் இதனால் பாதிக்கப்படுகின்றனர். இப்புற்றுநோய் கருப்பையின் மேற்பரப்பில் உள்ள உயிரணுக்களில் உண்டாகுகின்றன. இது Human Papillomavirus (HPV)  எனப்படும் ஒருவகை நுண்கிருமி கர்ப்பப்பை கழுத்து பகுதியில் தொற்றுவதால் ஏற்படுகின்றது. 

கர்ப்பப்பை கழுத்து புற்றுநோய் என்பது பொதுவாக 20 வயதிலிருந்து 45-50 வயதுள்ள பெண்களுக்கு உருவாகிறது. சிறுவயதிலேயே பாலியல் தொடர்புகளை ஏற்படுத்துவதன் மூலம் வைரஸ் தாக்கத்தினால் இவர்கள் உந்தப்படுவதாக தற்போது கண்டறியப்பட்டுள்ளது. 

கர்ப்பப்பை கழுத்து புற்றுநோய் தன் தீவிர நிலையை அடையும் வரை அதன் எந்த அறிகுறிகளையும் வெளிக்காட்டாது. இதனை PAP SMEAR பரிசோதனையின் மூலமே கண்டறிய முடியும். PAP SMEAR பரிசோதனையானது கருப்பவாயில் வழக்கத்திற்கு மாறான HPV நுண்கிருமிகளின் தாக்கங்களோ அல்லது புற்றுநோய்க்கான தடயங்களோ உள்ளனவா என்பதனை முன்கூட்டியே கண்டறிய பயன்படுத்தப்படுகிறது. 

எனவேதான், ஒவ்வொரு பெண்ணும் PAP SMEAR பரிசோதனை செய்துகொள்ள தூண்டப்படுகின்றனர். வெளித்தோற்றத்திற்கு தரும் முக்கியத்துவத்தை கொஞ்சம் உடல் நலத்திற்கும் கொடுப்போம்.

பழைய பதிவுகளை தேட

[blogger]

MKRdezign

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget