ஐஸ்சுக்கு ஐஸ் வைக்கும் தனுஷ்

காதல் கொண்டேன் படத்தில் நடித்தபோது முதன்முறையாக ரஜினி மகள் ஐஸ்வர்யாவை சந்தித்தார் தனுஷ். அப்போது தொடங்கிய அவர்களது நட்பு இரண்டு ஆண்டுகளாக வளர்ந்து காதலாகி பின்னர் கல்யாணத்தில் முடிந்தது. அதையடுத்து, இயக்குனராக ஆசைப்பட்ட ஐஸ்வர்யாவுக்கு கால்சீட் கொடுத்து 3 என்ற படத்தில் நடித்தார் தனுஷ். அதோடு, மனைவிக்கு சினிமா மட்டுமின்றி, கதை சம்பந்தப்பட்ட விசயங்களிலும் நிறைய ஆலோசனைகளை
வழங்கி வருகிறார் அவர்.

இந்த நிலையில், சமீபத்தில், எனது மாமனார் ரஜினியை இம்ப்ரஸ் பண்ணுவது ரொம்ப எளிது. ஆனால் எனது மனைவி ஐஸ்வர்யாவை இம்ப்ரஸ் பண்ணுவதுதான் ரொம்ப கஷ்டம் என்று மனைவி பற்றி சொல்லியிருந்தார் தனுஷ். ஆனால், இப்போதோ, எனது மாமனாரே ரொம்ப எளிமையானவர், ஆனால் எனது மனைவி அதைவிட 100 மடங்கு எளிமையானவர் என்று இப்போது ஐஸ்வர்யா பற்றி கூறியுள்ளார் தனுஷ். 

மேலும், எளிதில் நட்பாகி விடும் அவர், எல்லோரையும் ஒரே மாதிரி நடத்துவார். என் பிள்ளைகளுக்கும் நல்ல தாயாக இருப்பது போல், எனக்கும் நல்ல மனைவியாக இருந்து வருகிறார் என்றும் ஐஸ்வர்யாவுக்கு செம ஐஸ் வைத்துள்ளார் தனுஷ்.

பழைய பதிவுகளை தேட