இந்தியாவில் உள்ள மாம்பழ வகைகள் தெரியுமா?

கோடைகாலம் என்றாலே அனைவருக்கும் முதலில் நினைவுக்கு வருவது மாம்பழம் தான். ஏனெனில் கோடையில் தான் மாம்பழ சீசனானது ஆரம்பமாகிறது. பழங்களின் ராஜாவாக திகழும் மாம்பழத்திற்கு எண்ணற்ற பிரியர்கள் உள்ளனர். இத்தகைய மாம்பழத்தை பச்சையாகவோ, ஊறுகாயாகவோ அல்லது ஜூஸாகவோ செய்து சாப்பிடலாம்.

ஆகவே பலர் மாம்பழம் வாங்குவதற்கு மார்கெட்டுக்கு செல்வார்கள். ஏனெனில் பெரிய கடைகளை விட, மார்கெட்டில் தான் விலைமலிவாக மாம்பழமானது கிடைக்கும். அவ்வாறு மார்கெட் சென்றால் பல்வேறு வகையான மாம்பழங்களைப் பார்ப்போம். அந்த மாம்பழங்களில் அனைவருக்கும் அல்போன்சா, மல்கோவா, பங்கனப்பள்ளி போன்றவை மிகவும் பிரபலமானவை. ஆனால் இது மட்டுமின்றி இன்னும் பல மாம்பழங்களும் இந்தியாவில் விளைகின்றன. அவைப் பற்றி சிலருக்கு தெரியாது.

எனவே அத்தகையவர்களுக்காகஇந்தியாவில் வளரும் பல்வேறு வகையான ஒருசில மாம்பழங்களைப் பட்டியலிட்டுள்ளோம். அதைப் பார்ப்போமா!!!

அல்போன்சா மாம்பழம் (Alphonso) : அல்போன்சா மாம்பழம் மிகவும் விலை அதிகமானது. இதன் விலைக்கேற்ப இதன் சுவையும் சூப்பராக இருக்கும்.

பாதாமி மாம்பழம் (Badami) : இந்த வகையான இந்திய மாம்பழம் மிகவும் இனிப்புடன், சதைப்பற்று மிக்கதாக இருக்கும். எனவே இந்த மாம்பழத்தை அப்படியே அல்லது ஜூஸ் போட்டு குடிக்கலாம்.

பங்கனப்பள்ளி (Baiganpalli) : ஆந்திராவில் மிகவும் பிரபலமானது தான் பங்கனப்பள்ளி. இது மிகவும் அருமையான சுவையுடையது.

தசேரி மாம்பழம் (Dussehri) : உத்தர பிரதேசத்தில் விளையக்கூடிய மாம்பழம் தான் தசேரி. இதுவும் அதிக இனிப்புச் சுவையுடைய மாம்பழங்களுள் ஒன்று.

கேசர் மாம்பழம் (Kesar) : கேசர் மாம்பழம் மிகவும் சுவையுடனும், பச்சையாகவும் சாப்பிடக்கூடியது. பொதுவாக இந்த மாம்பழம் அகமதாபாத்திலிருந்து வந்தது.

மல்கோவா மாம்பழம் (Malgova) : சேலத்து மாம்பழமான மல்கோவா மாம்பழம் மிகவும் தித்திப்புடன் இருக்கும். இந்த மாம்பழம் ஊறுகாய் மற்றும் மில்க் ஷேக் போடுவதற்கு மிகவும் ஏற்றது.

மல்லிகா மாம்பழம் (Mallika) : இந்தியாவில் கிடைக்கும் இந்த மாம்பழம், நீலம் மற்றும் தசேரி மாம்பழத்தின் கலப்பினமாகும்.

ராஸ்புரி மாம்பழம் (Raspuri) : ராஸ்புரி மாம்பழங்களானது நீள்வட்ட வடிவில், சிவப்பு கலந்த மஞ்சள் நிறத்தில் இருக்கும். இது தென்னிந்தியாவில் மிகவும் பிரபலமான ஒரு மாம்பழம்.

செந்தூரன் (Sindura) : இந்த செந்தூரன் மாம்பழமானது மிகவும் இனிப்பான சுவையுடன், அதிக சதைப்பற்றுடன் இருக்கும். இதுப் போன்று, உங்களுக்கு வேறு ஏதாவது மாம்பழங்கள் பற்றி தெரிந்தால், அதை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

பழைய பதிவுகளை தேட