மகளிருக்கு சிசேரியன் பிரசவம் நடக்க காரணம் என்ன?

கர்ப்பிணி பெண்கள் தங்கள் கர்ப்ப காலத்தில் சந்திக்கும் ஒரு பிரச்சனை உயர் ரத்த அழுத்தம் நீரிழிவு நோய். உயர் ரத்த அழுத்தம்நீரிழிவு நோய் போன்றவற்றால் சிசேரியன் அறுவை சிகிச்சை அதிகரிக்கிறது என டாக்டர்கள் விளக்கம் தருகின்றனர். தற்போது சிசேரியன் அறுவை சிகிச்சை மூலம் குழந்தை பெறுவது அதிகமாகி கொண்டே வருகிறது. 

இதற்கு காரணம் சமீபத்தில் வாழ்க்கை முறையினால் ஏற்பட்டுள்ள நோய்கள்தான் காரணம் என டாக்டர்கள் பொதுவாக தெரிவிக்கின்றனர். கர்ப்ப காலத்தில் பெரும்பாலான பெண்கள் உயர் அழுத்தத்தினாலும், நீரிழிவு நோயினாலும் அவதிப்படுகின்றனர். 

இதுபோன்ற நோய்கள் ஏற்படுவதற்கு ஊட்டச்சத்து குறைவான உணவே காரணமாகும். எனவே, அறுவை சிகிச்சை மூலம் இவர்கள் குழந்தை பெற்றுக்கொள்ள டாக்டர்கள் அறிவுரை கூறுகின்றனர். அதே நேரத்தில் பல பெண்கள் பிரசவ வலியை தாங்க பயப்படுகின்றனர். எனவே, அவர்கள் பிரசவ அறைக்கு செல்ல விரும்புவதில்லை. 

மாறாக, நேரடியாக அறுவை கிசிச்சை அறைக்கு (ஆபரேஷன் தியேட்டருக்கு) சென்று குழந்தை பெற விரும்புகின்றனர். ஆனால் அறுவை சிகிச்சை மூலம் குழந்தை பெறுவது உடல்நலத்துக்கு கேடு, அத்துடன் 2வது குழந்தையை உடனடியாக பெறமுடியாது. 

அதற்கு காலம் தாழ்த்த வேண்டும். எனவே சாதாரணமாக குழந்தை பெற்று கொள்ள முயற்சிக்கும்படி பெரும்பாலான டாக்டர்கள் அறிவுரை செய்கின்றனர். காலம் தாழ்த்தி குழந்தை பெறுவதும், பெரும்பாலான பெண்கள் செயற்கை கருத்தரித்தல் மூலம் குழந்தை பெறுவதும், சிசேரியன் அறுவை சிகிச்சைக்கு காரணங்களாகவும் உள்ளன. 

குழந்தை நல்ல நேரத்தில் பிறக்க வேண்டும் என கருதி சிலர் அறுவை சிகிச்சை மூலம் குழந்தை பெற்றுக் கொள்கின்றனர். இவையே சிசேரியன் அறுவை சிகிச்சை அதிகரிக்க காரணங்களாகும். 

கர்ப்பிணி பெண்களே சிசேரியன் அறுவை சிகிச்சையை தவிர்க்க ஊட்டச்சத்து நிறைந்த உணவு வகைகளை விரும்பி சாப்பிடுங்க. உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள சத்தான காய்கறிகள் மற்றும் கீரை வகைகளை விரும்பி சாப்பிடுங்க. இதனை தொடர்ந்து சாப்பிட்டு வருவதால் சிசேரியனை தவிர்க்கலாம். 

பழைய பதிவுகளை தேட