பெண்கள் தன்னம்பிக்கையை வளர்த்துக் கொள்ளுவது எப்படி?

பெண்களே சூழ்நிலைக்கேற்ப அனுசரிக்கப் பழகிக் கொள்ளுங்கள். அதற்காக உங்கள் நோக்கத்தைக் கைவிட வேண்டும் என்பதில்லை. யாரிடம் பேசும் போதும் வெளிப்படையாகப் பேசுங்கள். ஆனால் முரட்டுத்தனமாக பேசாமல் மென்மையாக பேச வேண்டும்.. துணிவுடன் இருங்கள். ஆனால், எதிர்ப்புணர்வைக் காட்டாதீர்கள். 

தொடர்ந்து கடுமையாக உழையுங்கள்... ஏதாவது ஒன்றில் விசேஷமான திறமை உங்களுக்கு இருக்கும்.
அது என்னவென்று அறிந்து அதில் முயற்சியுடன் ஈடுபடுங்கள்.. எழுத்திலும், பேச்சிலும் திறமையினை வளர்த்துக் கொள்ளுங்கள். வெறும் வார்த்தை ஜாலங்களில் ஈடுபடாதீர்கள். 

அடிப்படைகளையும் விவரங்களையும் தனித்தனியாகப் பிரித்துக்கொள்ளுங்கள். எந்த ஒரு செயலை செய்வதாக இருந்தாலும் திட்டமிட்டு செயல்படுங்கள்.. அதே சமயம் விவரங்களை அலட்சியப் படுத்தாதீர்கள். தன்னம்பிக்கையுடன் இருங்கள். 

ஏமாளியாகவோ, தலை கர்வத்துடனோ இருக்காதீர்கள். எமனதில் சித்திரம் உருவாக்கி முன்கூட்டியே திட்டமிடுங்கள். உடனடியான எதிர்காலத்தை மறந்து நீண்ட எதிர்காலத்திற்குத் திட்டமிடாதீர்கள். மரியாதைக் குறைவினையோ, வெறுப்பையோ வளர்த்துக் கொள்ளாதீர்கள். 

வேலையை நேசியுங்கள். அதுவே முழு திருப்தியை அளிக்கும். முயற்சியை வளர்த்துக் கொள்ளுங்கள். சிறிய குழிகள்தான் பெரிய பள்ளங்களாகின்றன. துணிவுடன், நேர்மையுடன் இருங்கள். கஷ்டங்களைக் கடக்க அது உங்களுக்கு உதவும்.

பழைய பதிவுகளை தேட

[blogger]

MKRdezign

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget