முழுக்க நனைந்த தமன்னா முக்காடு போடுவாரா?

கேடி படத்தின் மூலம் தமிழுக்கு வந்தவர் மும்பை அழகி தமன்னா. அதன்பிறகு கல்லூரி, வியாபாரி போன்ற படங்களில் நடித்தவரை அயன், பையா, தில்லாலங்கடி போன்ற படங்கள் வெளிச்சம் போட்டு காட்டின. இதனால் விஜய்யுடன் சுறா பட வாய்ப்பினை பெற்றார் தமன்னா. ஆனால் அவர் நேரம் அந்த படம் ஊத்திக்கொண்டது. அதன் தொடர்ச்சியாக தனுசுடன் நடித்த வேங்கையும் வெற்றி பெறாததால், தோல்வி பயம் தமன்னாவை தெலுங்கு, இந்தி சினிமாக்களுக்கு துரத்தியது.

அதனால் அடுத்தபடியாக தமிழை மறந்துவிட்டு மற்ற மொழிகளில் நடித்து வந்த தமன்னா, அஜீத் நடிக்கவிருக்கும், சிறுத்தை சிவா இயக்கும் படத்தின் மூலம் மீண்டும் தமிழுக்கு வருகிறார். அவரிடத்தில், அஜீத் படத்தில் படுகவர்ச்சியாக நடிப்பதற்கு நீங்கள் மறுப்பு சொல்லி விட்டதாக கோலிவுட்டில் கிசுகிசுக்கப்படுவது குறித்து கேட்டபோது, என்னைப்பொறுத்தவரை கிளாமருக்கு ஒருபோதும் நான் தடைவிதித்ததில்லை. காரணம் என் உடல்கட்டுக்கு கிளாமர் உடைகள்தான் மேட்சாக இருக்கும். பையா படத்தில்கூட நான் மழையில் நனைந்தபடி ஆடிப்பாடிய பாடல்களைத்தான் ரசிகர்கள் அதிகமாக ரசித்தார்கள்.

அந்த வகையில், என்னால் முடிந்த வரை கவர்ச்சி விருந்து கொடுத்திருக்கிறேன். அப்படிப்பட்ட நான் எப்படி கவர்ச்சியாக நடிக்க மறுப்பு சொல்வேன். முழுக்க நனைந்த பிறகு யாராவது முக்காடு போடுவார்களா? என்று சொல்லும் தமன்னா, அஜீத் படத்திற்கு எந்த அளவுக்கு என்னை கிளாமராக நடிக்க சொன்னாலும் வாரி வழங்க தயாராக இருக்கிறேன் என்றும் கூறுகிறார்.

பழைய பதிவுகளை தேட